மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு..!!

Read Time:1 Minute, 44 Second

201704280201121012_FIR-against-Shilpa-Shetty-Raj-Kundra-in-cheating-case_SECVPFபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்தரா ஆகிய இருவர் தனியார் நிறுவனத்திடம் பணம் வாங்கி கொண்டு அவர்களை ஏமாற்றியதாக புகார் எழுந்தது.

டெக்ஸ்டைல் நிறுவனத்திடம் ரூ.24 லட்சம் மோசடி செய்ததாக சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம் தானே பிவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தது. அந்த புகாரின் பேரில் போலீசார் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்தரா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்தரா இருவரும் விரைவில் கைது செய்யப்படலாம் என்று மும்பை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ஷில்பா ஷெட்டி ஏற்கனவே மோசடி புகார்களில் சிக்கி உள்ளார். மும்பையில் அவர் நடத்தி வந்த நிறுவனம் சார்பில் கொல்கத்தாவை சேர்ந்த எம்.கே. மீடியா நிறுவனத்திடம் இருந்து ரூ.9 கோடியை அவர் பெற்றுக் கொண்டதாகவும், 2 ஆண்டுகளில் 10 தவணையாக இந்த பணம் திருப்பி தரப்படும் என்றும், அவரது நிறுவனத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பங்குகள் எம்.கே. மீடியா நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்றும் உறுதி அளித்ததாக புகார்கள் எழுந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூக்கமின்மையால் பெண்களுக்கு வரும் நோய்கள்..!!
Next post கள்ளக்காதலனுடன் ஒன்றாக இருந்த மனைவி: இருவருக்கும் கணவன் வைத்த ஆப்பு..!