47 நாளில் 30 கிலோ குறைந்து உயிருக்கு போராடிய இளைஞர்! உறைய வைக்கும் நிஜ கதை..!!

Read Time:1 Minute, 58 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)நேபாளம் நாட்டில் இமயமலையில் காணாமற்போன ஜோடி 47 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இளைஞரின் தோழி சடலமாகத்தான் மீட்கப்பட்டுள்ளார்.

தைவான் நாட்டைச் சேர்ந்த 21 வயதான லியாங் ஷெங் யுயே மற்றும் அவரது 19 வயது தோழி லியு சென் சுன் ஆகிய இருவரும் கடந்த மாத இமயமலையில் மலையேற்ற பயணத்தை தொடங்கியுள்ளனர்.

பயணத்தின் போது வீசிய பனிப்புயல் மற்றும் மாறுபட்ட சூழலினால் பனிச்சரிவினுள் சிக்கிக் கொண்ட ஜோடி வழி தெரியாமலும், மற்றவர்களின் உதவி கிடைக்காமலும் பரிதவித்து வந்துள்ளனர்.

இதனால், தாங்கள் கொண்டு வந்திருந்த உப்பை தின்று அருகிலுள்ள நதியிலிருந்து தண்ணிரை குடித்து உயிர் வாழ்ந்துள்ளனர்.

ஜோடிகளிடமிருந்து தகவல் வராததை தொடர்ந்து ஆசிய மலையேற்ற அமைப்பினர் ஹெலிகாப்டர் மூலம் தேடத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சிகரத்தில் உள்ள ஒரு நீர் வீழ்ச்சியின் அருகில் லியாங் மற்றும் லியு ஆகியோரை கண்டறிந்த மீட்புக் குழுவினர் இருவரையும் மீட்டுள்ளனர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக லியாங்கின் தோழி லியு சடலமாகத்தான் மீட்கப்பட்டுள்ளார். 30 கிலோ எடை குறைந்த நிலையில், மீட்க்கப்பட்ட லியாங் தற்போது உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேஸ்புக் நேரலையில் பயங்கரம்: 11மாதக் குழந்தையை தூக்கிலிட்டு தானும் தற்கொலைசெய்துகொண்ட தந்தை..!! (அதிர்ச்சி வீடியோ)
Next post திருமணமான பெண்களை பாதிக்கும் அந்தரங்க பிரச்சனை..!!