கனடா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் இளம்பெண் இவர் தான்: நடந்தது என்ன?..!!

Read Time:2 Minute, 31 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90கனடா நாட்டில் யாரும் எளிதில் செய்ய முடியாத காரியத்தை துணிச்சலாக செய்து வியக்க வைத்த இளம்பெண் ஒருவர் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கனடாவில் உள்ள ரொறன்ரோ நகரை சேர்ந்த Marisa Lazo என்ற 22 வயதான இளம்பெண்ணை பொலிசார் நேற்று முன் தினம் கைது செய்துள்ளனர்.

பல அடி உயரம் உள்ள இரும்பு கிரேனில் பல மணி நேரம் தனியாக அமர்ந்திருந்து பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக பொலிசார் இவரை கைது செய்தனர்.

இளம்பெண்ணை கைது செய்த பிறகு இவரைப்பற்றி பொலிசார் விசாரணை நடத்தியபோது பல வியக்க வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுவயது முதல் வீரதீரச்செயல்களில் அதிகளவில் ஆர்வமுடன் பங்கேற்பார் என்றும், த்ரில்லாக இருப்பதற்காக யாரும் செய்ய முடியாத பல செயல்களை செய்வார் எனவும் தெரியவந்தது.

நண்பர்கள் சிலரிடம் விசாரணை செய்தபோது. இளம்பெண் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே படுத்திருப்பது,

உயரமான கட்டத்தின் உச்சியில் நிற்பது, மின்கம்பிகளுக்கு மத்தியில் கால்களை தொங்க விட்டவாறு அமர்ந்திருப்பது உள்ளிட்ட புகைப்படங்களை அளித்து பொலிசாரிடம் விளக்கியுள்ளனர்.

இளம்பெண்ணிற்கு துணிச்சல் அதிகமே தவிர பிறருக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல்களில் ஈடுப்பட மாட்டார் என நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

பல மணி நேரம் கிரேனில் அமர்ந்திருந்து இளம்பெண்ணை பற்றி தான் தற்போது கனடாவில் பரபரப்பாக பேசிவருகிறார்கள்.

பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அப்பெண் சில நிபந்தனைகள் மற்றும் 500 டொலர் பினையாணையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேரளாவில் 290 தியேட்டர்களில் வெளியாகி ‘பாகுபலி-2’ சாதனை..!!
Next post நடிகை பிரீத்தி ஜெயினுக்கு ஜாமீன்: சிறைத்தண்டனை 4 வாரங்களுக்கு நிறுத்திவைப்பு..!!