`ப.பாண்டி’யை தொடர்ந்து அடுத்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பிரசன்னா..!!

Read Time:2 Minute, 1 Second

201704282118335496_Prasanna-to-play-a-Cop-role-in-his-next_SECVPFதனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் – பிரசன்னா நடிப்பில் வெளியான `பா.பாண்டி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் பிரசன்னா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அவரது கதாபாத்திரம் பேசப்படும்படி இருந்தது.

இந்நிலையில் பிரசன்னா தற்போது, மிஷ்கின் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து `துப்பறிவாளன்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் `திருட்டு பயலே 2′, `நிபுணன்’, `இதானோ வலிய காரணம்’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார்.

இதையடுத்து, தனது அடுத்த படத்தில் பிரசன்னா போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பிரபல எழுத்தாளரான குட்டி ரேவதி மற்றும் பத்திரிக்கையாளர் புதிய பருதி இணைந்து எழுதியுள்ள கதையை குட்டி ரேவதியே இயக்கவிருக்கிறார். இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் பிரசன்னா நடிக்க இருக்கிறார். இதில் ஐ.பி.எஸ். கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பிரசன்னா சிறப்பு பயிற்சியும் எடுத்து வருகிறாராம்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் ஆகஸ்டில் தொடங்க இருப்பதாகவும், மற்ற கதாபாத்திரங்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், இப்படம் குறித்த மற்ற தகவல்கள் அடுத்தடுத்து வெளியிடப்படும் என்றும் குட்டி ரேவதி தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நண்பர் மனைவியுடன் தொடர்பு; கணவன் ஆணுறுப்பை துண்டித்த மனைவி..!!
Next post கோடை காலத்தில் வியர்வை நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்வது..!!