என்னால் அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வர முடியவில்லை: சுசித்ரா பேட்டி..!!

Read Time:2 Minute, 50 Second

201704291232210094_suchitraaa2._L_styvpfகடந்த மாதம் கோலிவுட் வட்டாரத்தையே கதிகலங்க வைத்தவர் பின்னணி பாடகி சுசித்ரா. தற்போது கணவன் கார்த்திக் உடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். கடந்த மாதம் அவரது டுவிட்டர் பக்கத்தில் சினிமா பிரபலங்களான தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா, அனிருத், டிடி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரின் ஆபாச படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது. இவ்வாறு வெளியாகும் படத்திற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுசித்ரா கூறிய வந்தார். பின்னர் தனது டுவிட்டர் கணக்கையும் முடக்கினார்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் சுசித்ராவின் கணவர் கார்த்திக், அவரது டுவிட்டர் பக்கத்தில் அவரது அடுத்த நிகழ்ச்சி குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தார். பின்னர் அந்த வீடியோவின் முடிவில் அமைதியாக புத்தகம் படித்துக் கொண்டிருந்த சுசித்ராவை காண்பித்தார்.

தற்போது, அமெரிக்காவில் இருக்கும் சுசித்ரா, தான் மனஉளைச்சலில் இருந்து மெதுவாக மீண்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் கடந்த மாதம் நடந்த சம்பவங்கள் குறித்து தான் மிகவும் வருத்தப்பட்டு வருவதாகவும், தனது நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். அதே வேளையில் எனது நண்பர்கள் யாரையும் நான் இழக்க நினைக்கவில்லை. யாரும் என்னை விட்டு விலகாதீர்கள் என்றும் கூறியிருக்கிறார்.

என்னால் அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வரமுடியவில்லை, எனினும் அதற்காக போராடி வருகிறேன். என் மீது சினிமா துறையில் இருக்கும் யாரும் கோபப்பட வேண்டாம். என் மனநிலை குறித்து கார்த்திக் கூறியதை அடுத்து, அதில் இருந்து மீண்டு வர தான் பயிற்சி எடுத்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும் விரைவில் ஒரு சில மாதங்களில் இந்தியா திரும்புவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 500 பேரை கொண்ட மிகப் பெரிய குடும்பம்..!! (வீடியோ)
Next post கல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள்..!!