காப்பாற்றுங்கள் என கதறிய அகதி தாய்: கண்ணெதிரே தீயில் பலியான மகள்; வேடிக்கை பார்த்த பொலிசார்..!! (வீடியோ)

Read Time:2 Minute, 12 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)சுவிட்சர்லாந்தில் தீ விபத்தில் மகளை பறிகொடுத்த தாய், தனது மகளின் மரணத்திற்கு தீயணைப்பு மற்றும் பொலிசாரின் செயலற்ற தன்மையே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.

ஏப்ரல் 23ம் திகதி Payerne பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 வயதான இளம்பெண் உயிரிழந்தார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பரபரப்பு வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, சம்பவத்தன்று என் மகள் இரவு வேலைக்கு சென்று வந்ததால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளார்.

விபத்து ஏற்பட்டவுடன் நான் மகளிடம் போனில் பேசினேன், அவர் நன்றாக தான் இருந்தார்.

உடனே நான் குடியிருப்பு பகுதிக்கு வந்தேன், அப்போது தீயணைப்பு வீரர்கள், பொலிசார் என யாரும் சம்பவயிடத்திற்கு வரவில்லை.

சிறது நேரம் கழித்து வந்த தீயணைப்பு வீரர்களிடம் வெளியே வரமுடியாமல் சிக்கியுள்ள என் மகளை மீட்கும் படி கதறினேன், தீயணை அணைத்து மீட்க 40 நிமிடங்கள் ஆனது.

இதில், இறுதியில் விபத்தில் சிக்கி என் மகள் உயிரிழந்து விட்டாள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிசாரின் செயலற்ற தன்மையே இதற்கு காரணம்.

என் மகள் இறந்துவிட்டாள், இது யாருடைய தவறு, ஏன் அவர்கள் தீயை கட்டுப்படுத்த நாற்பது நிமிடங்கள் எடுத்தனர்? என எனக்கு தெரிய வேண்டும் என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள்..!!
Next post அந்த விஷயத்தில் அனுபவம் இல்லையா?… இத படிச்சிட்டு பட்டைய கிளப்புங்க…!!