தூங்கறதுக்கு முன் இதை செஞ்சா, தக தகன்னு ஜொலிக்கலாம்..!!

Read Time:2 Minute, 13 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)சருமத்தை பராமரிக்க பெரும்பாலானோர், பகல் பொழுதில் காண்பிக்கும் அக்கறை இரவு பொழுதில் கடைப்பிடிப்பதில்லை.

தூங்க செல்லும் முன் சருமத்தை பராமரிக்க போதிய கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பகல் பொழுதில் சரும ஆரோக்கியத்தை பேணுவது பயனற்றதாகிவிடும்.

இரவில் தூங்க செல்லும் முன் முகத்தை கழுவ வேண்டும். ஆனால் முகத்தை அதிகமாக அழுத்தி தேய்த்து கழுவக்கூடாது. வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுவது நல்லது. அது சருமத்தில் உள்ள துவாரங்கள் திறக்க வழிவகுப்பதுடன் அதிலிருக்கும் அழுக்குகளையும் வெளியேற்றும்.

மேக்கப் போட்டிருந்தால், எண்ணெய் தன்மை கொண்ட கிளிசனரை பயன்படுத்தி முதலில் மேக்கப்பை நன்கு நீக்க வேண்டும். அதன் பின் தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும்.

வாரம் இருமுறை முகத்திற்கு நீராவி பிடிப்பது நல்லது. அது முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு, தூசுகளை நீக்கும்.
ஈரமான தலையுடன் தூங்குவதை தவிர்க்க வேண்டும். தலை முடி பிசுபிசுப்பு தன்மையுடன் மாறி, மயிர்கால்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

தலைமுடியை இறுக்கமாக கட்டிக்கொண்டு தூங்குவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக நீளமாக கூந்தல் உள்ளவர்கள் தலை முடியை தளர்த்தி கட்டிக்கொள்வது நல்லது.

தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும். அது உடலுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நல்லது. கண்களுக்கு அடியில் கருவளையம் ஏற்படுவதை தவிர்க்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியின் தேவை அறிந்து அந்தரங்க கட்டில் விளையாட்டு..!!
Next post யப்பா…. எப்புடி எல்லாம் டிசைன் பண்றாங்கோ…!!! (வீடியோ)