நடுக்கடலில் இலங்கை எல்லை பலகை – தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடிப்பதை தடுக்க நடவடிக்கை..!!

Read Time:1 Minute, 29 Second

201705070504574000_Srilanka-sets-up-border-board-to-signal-tamilnadu-srilanka_SECVPFதமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்கிறபோது, அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் வழக்கமாக நடந்து வருகிறது. இதில் மத்திய அரசு தலையிட்டு, கைது செய்யப்படுகிற மீனவர்களை விடுவிக்க செய்து வருகிறது.

அதே நேரத்தில் இந்த பிரச்சினையில் நிரந்தர தீர்வு காணப்படவில்லை. இரு தரப்புக்கும் இடையில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டும் தீர்வு எட்டப்படவில்லை. ஆனால் கடல் எல்லை தெரியாமல்தான் எல்லை தாண்டி சென்று விடுவதாக தமிழக மீனவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் வந்துவிடாமல் தடுப்பதற்காக நடுக்கடலில் இலங்கை எல்லைப் பலகை ஒன்றை வைத்துள்ளது. இலங்கையில் இருந்து 5-வது மணல் திட்டில் இலங்கை கொடியுடன் இது வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தனுஷ்கோடியில் இருந்து 5-வது மணல் திட்டில் இந்தியாவும் எல்லைப் பெயர் பலகை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யானையைக் கொடுமைப் படுத்தும் சைக்கோ..!! (வீடியோ)
Next post நடிகம் சங்க கட்டிடம் கட்ட உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை..!!