பிறந்து பதினெட்டே மாதங்களில் 31 கிலோ; அரிய நோயால் பாதிக்கப்பட்ட ‘யாகிஸ்’..!!

Read Time:1 Minute, 39 Second

2_V_Balkis_Boyதுருக்கியில், பிறந்து பதினெட்டே மாதங்களான குழந்தை அதிகூடிய எடையால் அவதிப்பட்டு வருகிறது. மேலும், மாதந்தோறும் ஏறக்குறைய 2 கிலோ எடை வீதம் அதிகரித்துவருவதால், அதன் பெற்றோர் கடும் நெருக்கடிக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

யாகிஸ் பெக்த்தா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் குழந்தை பிறக்கும்போதே அரிய வகை மரபணுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளது.

பிறக்கும்போது சாதாரண எடையுடனேயே பிறந்த இந்தக் குழந்தை, நாளாக நாளாக வெகு வேகமாக அதீத உடல் எடையைப் பெற்றுள்ளது.

தற்போது இந்தக் குழந்தையின் அளவுக்கு ஏற்ற தொட்டிலையோ, நடைவண்டியையோ, டயப்பர் எனப்படும் கீழாடையையோ வாங்க முடியாமல் இருக்கிறது.

குறிப்பிட்ட இந்த நோயினால் இந்தக் குழந்தை தொடர்ச்சியாக உணவு உண்டு வருகிறது. இதனாலேயே அதீத உடல் எடையை எதிர்நோக்குகிறது.

இந்த நிலையில், இந்தக் குழந்தையை குணப்படுத்த தொடர்ந்தும் உதவ முடியாது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்ததால், அரசின் உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர் இந்தக் குழந்தையின் பெற்றோர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரங்கத்தையே சிரிப்பால் அதிர வைத்த சுட்டி குழந்தை.. நடுவர்கள் குலுங்கி குலுங்கி சிரித்த தருணம்..!! (வீடியோ)
Next post பெண்களுக்கு உடலுறவில் விருப்பம் குறையும் பிரச்சனையும் தீர்வுகளும்..!!