தலைமுடி அதிகமா வறண்டுபோகுதா?… இத செய்ங்க அப்புறம் பட்டுபோல் மின்னும்..!!

Read Time:4 Minute, 7 Second

201705111647160520_home-treatments-for-healthy-lustrous-hair-for-this-summer_SECVPFதலைமுடி அதிகமா வறண்டுபோகுதா?… இத செய்ங்க அப்புறம் பட்டுபோல் மின்னும்..

நாம் எல்லோருமே சந்திக்கிற பொதுவான பிரச்னைகளில் தலைமுடி பிரச்னையும் ஒன்று. அதற்குள்ளேயும் முடி உதிர்தல், பொடுகு, அடர்த்தி குறைதல், தலைமுடி சேதமடைதல் என பல பிரச்னைகள் உண்டு.

அதேசமயம் விலையுயர்ந்த ஏராளமான ஷாம்புகளும் கன்டிஷ்னர்களும் கடைகளில் கிடைக்கின்றன. ஆனாலும்கூட இந்த பிரச்னைகளுக்குத் தீர்வே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் வீட்டில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டு, இந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காணமுடியும். அவற்றில் சில…

வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொண்டு அதனுடன் 4 ஸ்பூன் அளவுக்கு தேன் சேர்த்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை தலையில் வேர் முதல் நுனி வரையிலும் அப்ளை செய்து, 20 நிமிடங்களுக்குப் பிறகு நல்ல ஹெர்பல் ஷாம்புவை கொண்டு தலையை அலசுங்கள்.
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உங்கள் கூந்தலை வலுவூட்டும். அதேபோல் தேனும் கூந்தல் சேதமடையாமல் காக்கும்.

முட்டை உங்கள் கூந்தலுக்கு நல்ல கண்டிஷ்னராகப் பயன்படுகிறது. முட்டையை நன்கு நுரைபொங்க அடித்து, அதனுடன் தேவைப்பட்டால் சில துளிகள் தென் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். அதை முடியின் வேர்க்கால்களில் நன்கு தேய்த்து 20 நிமிடங்கள் காயவிடவும். அதன்பின், குளிர்ந்த நீரில் தலையை அலசிவிட்டு, தரமான ஷாம்புவைக் கொண்டு குளிக்கவும்.

முட்டை முடி உதிர்வதைத் தடுப்பதோடு, கூந்தலைப் பட்டுபோல் மின்னவும் செய்திடும்.

சில துளிகள் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொண்டு அதில் எலுமிச்சை சாறு சில துளிகள் சேர்த்து கலந்தால் பசை போன்ற பேஸ்ட் கிடைக்கும். அதனுடன் வேப்பிலையைப் பொடி செய்து சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அந்த பேஸ்ட்டை தலைமுடியின் வேர்க்கால்களில் தடவி, நன்றாக மசாஜ் செய்யவும். பின் 10 நிமிடங்கள் உலரவிட்டு, தலையை அலசவும்.

இதை வாரத்துக்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால், மிக எளிதாக பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட முடியும்.

கற்றாழை கூந்தலுக்கு நல்ல மாய்ச்சுரைஸராகப் பயன்படுகிறதுது. இரண்டு அல்லது மூன்று முழு கற்றாழையை எடுத்துக் கொண்டு, அதிலுள்ள ஜெல்லை தனியே எடுக்கவும். அதில் தேவைப்பட்டால் இரண்டு துளிகள் ஆலிவ் ஆயிலைச் சேர்த்துக் கொள்ளலாம். இதை முடியின் வேர்க்கால்களில் நன்கு தேய்த்து குளித்து வர, கூந்தல் நன்கு ஊட்டம் பெறும்.

கற்றாழை முடி உதிர்வைக் குறைத்து, கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. தொடர்ந்து வாரம் ஒரு முறை இதை செய்து வந்தால், கூந்தல் நன்கு வளர்வதை உங்களால் உணர முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவு மீது அளவுக்கு அதிகமாக ஈடுபாடு உண்டாவது ஏன்?..!!
Next post உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா…இது எப்படினு பாருங்க நீங்களே அசந்து போவீங்க.!! (வீடியோ)