பற்கள் பளபளக்க இந்த முறையை செய்திடுங்கள்..!!
பற்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல், இயற்கையான முறையில் பற்கள் பளிச்சிட அருமையான வழிகள் இதோ!
பற்கள் பளிச்சிட என்ன செய்ய வேண்டும்?
ஸ்ட்ராபெர்ரி பழத்தை அரைத்து, அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் போல செய்து, அதை கொண்டு பற்களை நன்றாக துலக்க வேண்டும். இந்த முறையை தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வாழைப்பழத்தில் தோலை வைத்து பற்களின் உள்பக்கம் நன்றாக தேய்த்து விட்டு, பின் டூத் ப்ரஷ் பயன்படுத்தி 5-7 நிமிடங்கள் பற்களை நன்றாக துலக்கினால், பற்கள் வெண்மையாக பிரகாசிக்கும்.
தேங்காய் எண்ணெயை பற்கள் முழுவது தடவி, 15-20 நிமிடங்கள் கழித்து, டூத் ப்ரஷ் பயன்படுத்தி, பற்களை துலக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு, 2-3 முறைகள் செய்து வர வேண்டும்.
1 டீஸ்பூன் மஞ்சள் தூள், சில துளிகள் தேங்காய் எண்ணெய் மற்றும் புதினா எண்ணெய் 2-3 துளிகள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து, பேஸ்ட் போல செய்து, டூத் ப்ரஷ் பயன்படுத்தி, பற்களை துலக்க வேண்டும்.
பற்களை டூத் ப்ரஷ் பயன்படுத்தி துலக்கிய பின் எலுமிச்சைச் சாற்றில் சிறிதளவு உப்பைக் கலந்து, அதை கொண்டு நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். இந்த முறையை வாரம் 3 முறைகள் செய்ய வேண்டும்.
துளசி இலைகளை அன்றாடம் பயன்படுத்தும் டூத் பேஸ்டில் கலந்து, பற்களை துலக்கி வந்தால், பற்கள் வெண்மையாக பளிச்சிடும்.
Average Rating