குப்பை மேனி தானே என்று சாதாரணமா நினைக்காதீங்க..!!

Read Time:2 Minute, 12 Second

201705171350123025_kuppaimeni._L_styvpfநம் வீட்டருகே, சாலை ஓரங்களிலும், வீதிகளிலும், தோட்டங்களிலும் ஏராளமான மூலிகைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகளில் குப்பைமேனியும் ஒன்று. குப்பை மேனியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. அதன் நன்மைகளை இங்கு கான்போம்.

குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்..

குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும்.

குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம். தீப்பட்ட புண்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும்.

10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் வெளியேறும்.

குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் திமிர்வாதமான நரம்பு பலவீனம், உடல் வலி, கால் வலி, மந்தத்தன்மை போன்றவை நீங்கும்.

முகத்தில் பெண்கள் சிலருக்கு பூனை மீசை தாடி போன்றவை வளர்ந்து முக அழகை கெடுக்கும்,. அவர்கள் குப்பை மேனியை கஸ்தூரி மஞ்சளுடன் அரைத்து முகத்தில் தடவி வந்தால் நாளைடவில் முடி உதிர்ந்துவிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பட வாய்ப்பிற்காக பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொண்ட நடிகைகள் இவர்கள்தான்..!!
Next post பிச்சைகாரனை காதலித்து திருமணம்.. பாலியல் தொழிலாளியின் நெகிழ்ச்சி தருணம்..!!