61 வயதிலும் பதுமையாக ஜொலிக்கும் பேரழகி..!!
சீன திரையுலகின் கனவுக்கன்னியாக வலம் வந்த Liu Xiaoquing – க்கு தற்போது 61 வயதாகிவிட்டாலும், 18 வயது பதுமை போன்று பளபளப்புடன் ஜொலிக்கிறார்.
Frozen Beauty என்று செல்லமாக அழைக்கிறது திரையுலகம். சினிமா நடிகை, தொழிலதிபர், அரசியல்வாதி என பல்வேறு பரிமாணங்களோடு சீனாவை வலம் வருகிறார் லியூ.
தனது 30 வயதில் ‘The Great Wall of the South China Sea’ (1976) படம் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார். ‘What a Family’, ‘The Little Flower’, ‘The Burning of the Imperial Palace’ என தொடர் வெற்றி, லியூவுக்கு கிடைத்தது.
1990களில் சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு தொழிலில் கவனம் செலுத்தியவர், 2004ம் ஆண்டு மீண்டும் திரைத்துறைக்கு வந்தார். சினிமா, தொழிலதிபர் என இரட்டைக் குதிரையில் சவாரி செய்தார். ‘I did my way in 1983’ என்னும் இவரது சுயசரிதை பரவலாக கவனம் பெற்றது.
‘உலகின் டாப் 50 பணக்காரர்களில்’ இவருக்கு 45வது இடத்தை அளித்து 1999ம் ஆண்டு ‘Forbes’ பத்திரிகை இவரை கவுரவப்படுத்தியது
இடையில் வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிறைக்கு சென்ற இவர், துவண்டுவிடாமல் மீண்டும் 2004 ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
61 வயதிலும் பேரழியாக ஜொலிப்பதற்கு காரணம், தனது உடலை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் என்று கூறப்பட்டது, ஆனால் இதனை லியூ மறுத்தார்.
நான் முகத்துக்கு எந்த க்ரீமும் அப்ளை செய்தது கிடையாது, அறுவை சிகிச்சையும் செய்துகொள்ளவில்லை என கூறுகிறார்.
Average Rating