`சங்கமித்ரா’ படக்குழுவில் மேலும் இரு பிரபலங்கள்..!!

Read Time:2 Minute, 36 Second

201705230914137064_Two-More-Big-Names-adds-in-Sangamithra_SECVPFசுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ள படம் `சங்கமித்ரா’. ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இப்படம். பிரான்சில் நடைபெற்று வரும் 70-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்காக பிரான்ஸ் சென்றுள்ள `சங்கமித்ரா’ படக்குழு, அங்கு சங்கமித்ராவை அறிமுகம் செய்து, சில போஸ்டர்களையும் வெளியிட்டது. இதில் சுந்தர்.சி., ஹேமா ருக்மணி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ. 300 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரிக்க உள்ள இப்படம், 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கமித்ரா என்ற பதுமையை மையமாகக் கொண்டு உருவாக இருக்கிறது.

ஜுன் முதற்பாதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக படக்குழு தீவிரமாக தயாராகி வரும் நிலையில், பிரபல தொழில்நுட்பக் கலைஞர்களும `சங்கமித்ரா’ படக்குழுவில் இணைந்திருக்கின்றனர். இதுதவிர மேலும் இரு பிரபலங்கள் `சங்கமித்ரா’ படக்குழுவில் இணையவிருக்கின்றனர். தமிழ் சினிமாவில் சுபா என்று அழைக்கப்படும் பிரபல திரைக்கதை எழுத்தாளர்களான சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் சங்கமித்ராவுக்கு திரைக்கதை எழுத இருக்கின்றனர்.

இவர்களது வெற்றிக் கூட்டணியில் சமீபத்தில் வெளியான `கவண்’ நல்ல வரவேற்பை பெற்றது. இதுதவிர, இவர்கள் கூட்டணியில் வெளியான சில வெற்றிப் படங்களாவன, `தனி ஒருவன்’, `அனேகன்’, `ஆரம்பம்’, `மாற்றான்’, `கோ’ மற்றும் `அயன்’. இதுதவிர ஷங்கர் – விக்ரம் கூட்டணியில் வெளியான `ஐ’ படத்திலும், விஜய்-ன் `வேலாயுதம்’ படத்திலும் பணியாற்றி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெறுப்புச் செயற்பாடுகளின் அபாயமணிச் சத்தம்..!! (கட்டுரை)
Next post மேடையில் கண்கலங்கிய படி குடும்ப ரகசியத்தை உளறிக் கொட்டிய பிரியங்கா…!! (வீடியோ)