நடிகர் சாமிக்கண்ணு மரணம்..!!

Read Time:1 Minute, 24 Second

201706040956132315_Actor-samikannu-dies_SECVPFபிரபல நடிகர் சாமிக்கண்ணு சென்னையில் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95.

கடந்த 1954-ம் ஆண்டு வெளியான ‘புதுயுகம்’ என்ற படத்தில் சாமிக்கண்ணு அறிமுகம் ஆனார். அன்னக்கிளி, வண்டிச் சக்கரம், ஜானி, முள்ளும் மலரும், போக்கிரி ராஜா, சகலகலாவல்லவன், என் ராசாவின் மனசிலே, மகா பிரபு உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

டைரக்டர்கள் மகேந்திரன், ராமநாராயணன், ராஜ சேகர், ராஜ்கிரண் உள்ளிட்ட பலருடன் சாமிக்கண்ணு இணைந்து பணியாற்றியுள்ளார். தனது 8 வயதில் இருந்தே நாடகக் கம்பெனிகளில் பணிபுரிந்துள்ளார்.

வயோதிகம் காரணமாக சாமிக்கண்ணு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவர் மரணம் அடைந்தார்.

சாமிக்கண்ணுவின் இறுதிச்சடங்கு சென்னை பள்ளிக்கரணை மயானத்தில் இன்று மாலை 4மணிக்கு நடைபெறுகிறது.

மறைந்த நடிகர் சாமிக்கண்ணுவுக்கு தயானந்தன் உள்பட 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் சர்வதேசத்தை நோக்கி….!! (கட்டுரை)
Next post 8 முதியவர்களை கொன்ற செவிலியர்..!! (வீடியோ)