வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?..!!

Read Time:2 Minute, 42 Second

201706101437497242_benefits-of-eating-raw-onions_SECVPFவெங்காயத்தில் சல்பர், விட்டமின் C, B6, பயோடின், ஃபோலிக் அமிலம், குரோமியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா?

வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் தமனிகளில் ப்ளேக்குகளின் உருவாக்கத்தைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

வெங்காயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுவாசகுழாய் தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியில் இருந்து விடுபட உதவுகிறது.

வெங்காயம் சளி, இருமல், காய்ச்சல், தும்மல் மற்றும் மூக்கு ஒழுகல் போன்றவற்றையும் தடுக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

வெங்காயத்தில் உள்ள ஆன்டி – மைக்ரோபியல் தன்மை சளி, காய்ச்சல், தும்மல், மூக்கு ஒழுகல், போன்ற நோய்களை சரி செய்து, அல்சர் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

வெங்காயத்தில் உள்ள கரையக் கூடிய நார்ச்சத்துக்கள், குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து, செரிமானம், மலச்சிக்கல், சிறுநீர்ப்பை கோளாறுகள் போன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.

வெங்காயத்தில் உள்ள ஆன்டி – செப்டிக் மற்றும் ஆன்டி – மைக்ரோபியல் பண்புகள், காசநோயை ஏற்படுத்தும் மைகோ பாக்டீரியத்தை செயலிழக்கச் செய்து, காச நோய் வராமல் தடுக்கிறது.

பிரசவத்திற்கு பின் பெண்கள் வெங்காயத்தை சிறிது பச்சையாக தினமும் சாப்பிட்டால், அது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

வெங்காயத்தில் கலோரிகள், சோடியம் குறைவு மற்றும் கொழுப்புகள் அற்றது என்பதால்,

அது ரத்த நாளங்களின் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து, ரத்த சோகை, உயர் இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தெலுங்கு சூப்பர்ஸ்டாருடன் மோதும் கார்த்தி?..!!
Next post மகளை கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு சாகும் வரை ஜெயில்..!!