`இமைக்கா நொடிகள்’ படத்தில் இணைந்த ஷங்கர் பட பிரபலம்..!!

Read Time:1 Minute, 43 Second

201706291734486226_Shankar-film-fame-Popular-Joins-in-Imaika-Nodigal_SECVPFமான்ட்டி காலனி’ படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கி வரும் படம் `இமைக்கா நொடிகள்’. ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும், இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்கிறார். நயன்தாரா, ராஷி கண்ணா, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பாலிவுட்டின் பிரபல நடிகர் அனுராக் காஷ்யப் மிரட்டல் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தை `த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தை தயாரித்த கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஹிப் ஹாப் தமிழா இசையமைத்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. அதில் சைக்கிள் ஸ்டண்ட் ஒன்றும் இடம்பெறுகிறது. ஹாங் காங்கின் பிரபல ஸ்டண்ட் கலைஞரான லீ ஹான் யூ அந்த ஸ்டண்ட் காட்சியை வடிவமைத்திருக்கிறார். இதற்கு முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த வெளியான `ஐ’ படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சியை இவர் வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நோன்பு பெருநாளை கொண்டாடிய சிறுவன் ஆடிய நடனம் ; இணையத்தில் பிரசித்தி..!! (வீடியோ)
Next post மிளகை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்து..!!