கைது செய்த போது காதலியிடம் காதலை தெரியப்படுத்திய காதலர்..!! (வீடியோ)
அமெரிக்காவில் நபர் ஒருவர் தன்னை கைது செய்யும் போது, தனது காதலை காதலியிடம் தெரியப்படுத்திய வீடியோ வைரலாகியுள்ளது.
Oklahoma மாநிலத்தை சேர்ந்த Thompson என்பவர் Leandria Keith என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
தனது காதலை Keith- யிடம் பலமுறை சொல்வதற்கு முயற்சி செய்து அது தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில் தனது பிறந்தநாளன்று காதலை தெரியப்படுத்தலாம் என திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், பல்வேறு குற்றங்களை புரிந்துள்ள Thompson மீது அதிக புகார்கள் உள்ள காரணத்தால் பொலிசார் அவரை கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, Thompson- ன் பிறந்தநாளன்று பொலிசார் அவரது வீட்டுக்கு சென்று அவரை கைது செய்து கையில் விலங்கு மாட்டியுள்ளனர்.
அப்போது, பொலிசாரின் அனுமதியுடன் தான் காதலித்த பெண்ணின் கையில் முத்தமிட்டு காதலை தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் பொலிசார் ஒருவரின் ஆடையில் மாட்டியிருந்த கமெராவில் பதிவாகியுள்ளது.
Average Rating