கூந்தல் வளராமல் இருக்க என்ன காரணம்?… தீர்க்கும் வழிகள்…!!

Read Time:1 Minute, 58 Second

201707210933344174_why-hair-does-not-grow-ways-to-solve_SECVPFதலைமுடி வளராமல் இருப்பதற்குக் காரணம் தண்ணீர், தூசி, மாசுக்கள், ஊட்டச்சத்து இல்லாமை என பல காரணங்கள் உண்டு. அதில் குறிப்பாக பெண்களுக்கு முடி வளர்ச்சியைத் தடை செய்யும் மற்றொரு விஷயம் தலைமுடியின் நுனிப்பகுதியில் உண்டாகும் வெடிப்புகள் தான்.

தலைமுடியின் நுனிப்பகுதியில் போதிய எண்ணெய்ப்பசை இல்லாததால், ஊட்டச்சத்து குறைபாட்டால் முடி வெடிக்க ஆரம்பிக்கிறது.

அதை இயற்கை முறையில் எப்படி சரிசெய்வது?…

ஒரு வாழைப்பழத்தை மசித்து, அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து, வேர் முதல் முடியின் நுனிப்பகுதி வரை தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும்.

1 முட்டையின் வெள்ளைக் கருவுடன் பால் கலந்து, தலையில் நன்கு தடவி 20 நிமிடம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பப்பாளி பழத்தை நன்கு குழைத்து, அதனுடன் தயிர் சேர்த்து தலைமுடியில் தடவி 45 நிமிடம் ஊறவைத்து கழுவி வர வேண்டும்.

ஈரமான தலைமுடியில் ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகிய அனைத்தையும் சரிசமமாக எடுத்து, அதை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்துப் பின் சீயக்காய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரோக்கியமான இடைவிடாத செக்ஸ் இன்பம்..!!
Next post போதை பொருள் கும்பலுடன் தொடர்பு: சார்மி – முமைத்கானுக்கு மீண்டும் நோட்டீஸ்..!!