சிம்கார்டை நுழைக்கும் போது திடீரென்று தீப்பற்றி எரிந்த Redmi Note !:வீடியோ..!!
ஒரு போன் வெடிக்கிறது என்றால் அதற்கு அதிக சூடாவது அல்லது அதிக நேரம் சார்ஜ் போடுவது என்பது ஒரு காரணமாக இருந்து வந்தது.
ஆனால், சிம்கார்டை போட்டவுடன் ஒரு போன் வெடித்துள்ளது.
இந்த சம்பவம், பெங்களூரு பூர்விகா மொபைல் ஸ்டோரில் தான் நிகழ்ந்துள்ளது.
அதாவது, Redmi Note 4 போனில் சிம்கார்டை நுழைக்க முற்படும் போது திடீரென்று போன் வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது.
இது குறித்து, Redmi நிறுவனம் கூறியதாவது, வாடிக்கையாளர் போனுக்குரிய சார்ஜரை உபயோகப்படுத்தாமல் வேறு நிறுவனத்தின் சார்ஜரை உபயோகப்படுத்தியதால் தான் இந்த அசம்பாவித சம்பவம் நிகழ்ந்துள்ளது எனக் கூறியுள்ளது.
மேலும், இந்த நிறுவனத்தின் போன் வெடித்தது புதியதல்ல, கடந்த வருடம் கூட இதே போன்று ஒரு சம்பவம் நிகழ்ந்து அந்த வீடியோவானது மிக வைரலாக சமூக வலைதளத்தில் பரவியது.
இந்நிலையில், தற்போது, இந்த போன் வெடித்துள்ள வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.
Average Rating