ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை எந்த அளவு எடுத்துக்கொள்ளலாம்?..!!

Read Time:3 Minute, 6 Second

201707261446137357_What-level-of-healthy-snacks-can-you-take_SECVPFசுண்டல், பொரிகடலை, அவல், சோளக்கருது, பொரி. உருண்டை, வேர்க்கடலை, எள் உருண்டை, பயத்தம் உருண்டை, ரவா லட்டு போன்ற உணவுகளைத்தான் நொறுக்குத்தீனியாகச் சாப்பிட்டு வந்தனர் நம் முன்னோர்கள். ஆனால், இன்று பண்டிகை நாட்களில் மட்டுமே கடமைக்குச் செய்து சாப்பிடுகிறோம்.

மேலும் கப்பை, மரவள்ளிக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன. ஃப்ரூட்சாலட், வெஜ்சாலட், ஃப்ரெஷ் பழங்களில் அதிக அளவு வைட்டமின்கள் உள்ளன. இவை எல்லாம், நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக்கூடியவை. இதனால், ரத்தஅழுத்தம் மற்றும் உடல்எடை கட்டுப்படுகிறது.’

மேலே குறிப்பிட்ட ஆரோக்கியமான நொறுக்குத்தீனி அனைத்து வயதினருக்கும் தேவை. ஆனால், நோய் பாதிப்பு உள்ளவர்கள் மட்டும் தகுந்த ஆலோசனைபடி எடுத்துக்கொள்ள வேண்டும். என்னதான் ஆரோக்கியமானது என்றாலும், எப்போதுமே சாப்பிட்டுக்கொண்டிருப்பது ஆபத்துதான். தேவையான நேரத்தில் மட்டுமே குறைந்த அளவு சாப்பிடலாம்.

இப்போது உள்ள சூழலில் சாட் மற்றும் பேக்கரி வகைகள் தவிர்க்க முடியாதது. எனவே, வாரத்துக்கு 2 நாட்கள் பப்ஸ், கேக் போன்ற சாட் ஐட்டங்களை எடுத்தால், ஒரு நாள் அவித்த பயறுகள், ஒரு நாள் பழங்கள், சாலடுகள், ஒரு நாள் வேர்க்கடலை, கிழங்கு வகைகள், மற்றொரு நாள் பாதாம், முந்திரி, உலர்திராட்சை மற்றும் பேரிச்சம்பழம் என எடுத்துக்கொள்ளலாம். மேலும், வெஜ் சான்ட்விச், எக் சான்ட்விச் சேர்த்துக்கொள்ளலாம். முடிந்த வரை அதிகம் வாங்கி ஃபிரிட்ஜில் அடைத்துவைத்து சாப்பிடுவதைத் தவிர்த்து, தேவைக்கு ஏற்ப வாங்கிக்கொள்வது சிறந்தது.

பாட்டில் குளிர்பானங்களைவிட, இளநீர், மோர், கூழ் வகைகள், காய்கறி சூப்கள், அருகம்புல், வாழைத்தண்டு ஜூஸ் மற்றும் ஃப்ரெஷ் ஜூஸ் வகைகளைச் சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமாகச் செயல்பட முடியும்.’

வீட்டில், நம் கையால் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் செய்து சாப்பிடும் திருப்தியும், சுவையும் வெளியில் வாங்கிச் சாப்பிடும் உணவுகளில் கிடைக்காது…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எல்லோரும் ஏமாத்திட்டே இருக்காங்க… காயத்ரியிடம் கதறும் ஓவியா..!! (வீடியோ)
Next post மின்சாரம் தாக்கிய குரங்கை காப்பற்றிய இளைஞர்கள்! குவியும் பாராட்டுக்கள்..!! (வீடியோ)