இயர்போனை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் கெடுதல்கள்..!!

Read Time:5 Minute, 0 Second

201708030821468061_earphones-used-problems_SECVPFஎப்போதும் இயர்போனை மாட்டிக்கொண்டு பாட்டுக் கேட்பது, செல்போனில் தொடர்ந்து பேசுவது போன்ற வற்றால் வளரும் தலைமுறையினருக்கு காது கேளாமைப் பிரச்சினை அதிகரிப்பதாகச் சொல்கின்றன, மருத்துவ ஆய்வுகள். அதிகமான சத்தத்துடன் பாடலைக் கேட்கும்போது, பாதிப்புகளும் அதிகமாக இருக்கும். இந்தப் பாதிப்பு, காது கேளாமைப் பிரச்சினை, செவித்திறன் பாதிப்பது என இரண்டு மாதிரியான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

வெகுநேரமாகத் தொடர்ந்து இயர்போன் அல்லது ஹெட்செட் பயன்படுத்துவதால், காதின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய சவ்வுகள், நரம்புகள் பாதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கும் திறன் குறையத் தொடங்கும். இறுதியாக, முழுமையாகவே காதுகேளாமை வந்துவிடும். 100 டெசிபலுக்கு மேற்பட்ட சத்தத்துடன் 15 நிமிடங்கள் வரை இயர்போனில் பாட்டு கேட்டால், காது கேளாமை பாதிப்பு நிச்சயம் வரும். இயர்போன் அல்லது ஹெட்செட் கேட்டுக் கொண்டிருக்கும்போது, குறிப்பிட்ட அளவு வரையுள்ள சத்தத்தைத் தாண்டினால், ‘வார்னிங் மெசேஜ்’ காட்டும். சிலர் அதைப் புறக்கணித்து விட்டு, அதிக சத்தம் வைத்து பாட்டைக் கேட்பது உண்டு. இதனால், செவியில் உள்ள மெல்லிய சவ்வுகள் நிச்சயம் பாதிப்படையும்.

இயர்போனைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது, காதுக்குள் செல்லும் காற்றோட்டத்துக்கு தடை ஏற்படும். இதனால், காதில் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும். மற்றவருடைய இயர்போனை வாங்கிப் பயன்படுத்துவதால்கூட, காதில் நோய்த்தொற்று ஏற்படலாம். அதாவது, பாக்டீரியாக்கள் இயர்போன் மூலமாக மற்றவருக்குப் பரவும். அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பிறகு, காது மரத்துப் போகும்.

தற்காலிகமாகக் காது கேட்கும் திறன் குறைந்து, மீண்டும் அது இயல்புநிலைக்குத் திரும்ப சில மணி நேரம் ஆகும். இதை, நம்ப்னெஸ்’ என்பார்கள். சிலர் புளூடூத் பயன்படுத்துகின்றனர். இது கதிர்வீச்சுகளை வெளியேற்றும். இந்தக் கதிர்வீச்சுகளால், கேட்கும்திறன் குறைவது, நரம்பு மண்டலம் பாதிப்பது, உட்புறக் காது பாதிப்பது, மூளையில் பாதிப்புகள் வருவது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. கார், ரோடு, ரெயில் விபத்துகள்கூட இயர்போன்கள் பயன்படுத்துவதால் நிகழ்கின்றன. ஹாரன் சத்தம் கேட்காமல் போவதால், இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன.

இயர்போன் பாதிப்பின் அறிகுறியாக காதில் தொடர் இரைச்சல் கேட்கத் தொடங்கும். தூரத்திலிருந்து வரும் சத்தம் கேட்காமல் போகும். அருகில் எழும் சத்தம்கூடக் கேட்காமல் போகும். காதில் மந்தமான நிலை உருவாகும். காது மரத்துப் போகும்.

பொதுவாகவே, காது கேளாமை பாதிப்பு வந்தால், அந்தப் பாதிப்பைக் குணப்படுத்துவது கொஞ்சம் கடினம்தான். நரம்பு மண்டலத்தில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதைக் குணப்படுத்துவது மிகவும் கடினம். நரம்புகளின் பாதிப்புபோல, காது தொடர்பான மற்ற பாதிப்புகளுக்கும் இது 95 சதவீதம் வரை பொருந்தும். ஒருமுறை செவித்திறன் குறைந்து விட்டால், மீண்டும் அதைப் பெறுவது என்பது கடினமான காரியம். ஆனால், மருத்துவரின் ஆலோசனைப்படி மேலும் செவித்திறன் குறையாமல் இருக்க சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம். மருத்துவர் பரிந்துரைத்தால், காது கேட்கும் கருவியைப் பயன்படுத்தலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளி வருகைப் பதிவேட்டில் ஆபாச நடிகையின் பெயர்: ஆசியரை கலாய்த்த மாணவர்கள்..!! (வீடியோ)
Next post ராஜநாகத்தால் உணவாக உட்கொள்ளப்பட்ட மற்றொரு பாம்பு உயிருடன் வெளிவந்த அதிசயம்..!! (வீடியோ)