கண்ணெரிச்சலில் இருந்து தீர்வு தரும் இயற்கை வைத்தியம்..!!

Read Time:2 Minute, 17 Second

201708081106450501_Natural-remedies-to-burning-eyes_SECVPFஇப்போதைய காலக்கட்டதில் கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் இல்லாத வாழ்க்கையைக் காண்பது அரிது. இந்த வாழ்வியல் முறை மாற்றத்தினால் கண்ணெரிச்சல், உடல் எடை அதிகரிப்பு, ஆண்மை குறைவு என பல பிரச்சனைகள் பரிசாய் கிடைத்திருக்கிறது. இதில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படும் குறைபாடாக கருதப்படுவது கண்ணெரிச்சல் தான்.

இதற்கான எளிய வீட்டு முறை வைத்தியம் ஒன்று இருக்கிறது. அது ஒரு ஸ்பெஷல் எண்ணெய், அதை தலைக்கு தேய்த்து குளித்தால் கண்களில் எரிச்சல் குறைந்து, குளிர்ச்சி அடையும். உடல் புத்துணர்ச்சியாகவும் உணர முடியும். இனி அந்த ஸ்பெஷல் எண்ணெய்யை எப்படி எளிதாக வீட்டிலேயே தயார் செய்வது, பயன்பெறுவது என்பதை பற்றி காணலாம்…

அறிகுறிகள் இந்த எளிய வைத்திய முறையை கண் எரிச்சல் மட்டுமின்றி கண் வலி, கண் சிவந்து காணப்படும் போது கூட பின்பற்றலாம்.

தேவையான பொருட்கள் இந்த ஸ்பெஷல் எண்ணெயை வீட்டிலேயே எளிதாக தயாரிக்க முடியும். நல்லெண்ணெய், வெங்காய சாறு, புளிய இலைச்சாறு போன்றவை தான் தேவையான பொருட்கள்.

செய்முறை:

வெங்காயம் மற்றும் புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்துக் கொள்ளவும்.

செயல்முறை:

நன்கு கலந்து வைத்துள்ள அந்த எண்ணெய்யை தலையில் தேய்த்து சிறிது நேரம் காய விடவும்

தலைக்கு குளியல் எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு, தலைக்கு குளித்து வாருங்கள். பிறகு உங்கள் கண் எரிச்சல் நீங்கி, கண் நல்ல குளிர்ச்சியடையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓவியாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கமல்… மீண்டும் வருகிறாரா?..!!
Next post வீட்டில் முடங்கிய ஜுலியைப் பற்றி தம்பியின் பரபரப்பு பேட்டி..!!