சிரஞ்சீவி படத்தில் விஜய் சேதுபதி..!!
தெலுங்கு பட உலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிரஞ்சீவி, தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு இந்தியாவின் பல பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் நிரஞ்சீவி நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்திய விடுதலை போராளி ஒருவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான இந்த படத்தை சுரேந்திர ரெட்டி இயக்கவுள்ளார்.
‘சைரா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, நயன்தாரா, கிச்சா சுதீப், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இப்படத்தை தயாரிக்கின்றார்.
சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அடங்கிய டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் சற்றுமுன் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தப் படத்தை தெலுங்கில் தயாரிப்பதோடு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
Average Rating