த்ரிஷா, நயன்தாராவை பின்பற்றும் தன்ஷிகா..!!
தமிழ் சினிமாவில் தற்போது நடிகைகள், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கியுள்ளனர். அப்படி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகி வரும் ‘மோகினி’, ‘கர்ஜனை’ படத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.
அதுபோல், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘டோரா’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இவரது நடிப்பில் ‘கொலையுதிர் காலம்’, ‘அறம்’, ‘கோ கோ’ படங்களும் உருவாகி வருகிறது. தற்போது இந்த வரிசையில் தன்ஷிகாவும் இணைந்துள்ளார்.
‘பரதேசி’, ‘கபாலி’ படங்களில் தரமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த தன்ஷிகா, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வருகிறார். இவர் அடுத்தாக ‘குழலி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
Average Rating