தம்பதிகளின் கவனத்துக்கு 10 விஷயங்கள்..!!

Read Time:3 Minute, 58 Second

Bhabhi-Romance-With-Young-Neighbour.mp4_snapshot_07.58_2016.04.04_15.20.38-350x219திருமணம் முடிந்த தம்பதிகள் தங்களின் வாழ்வில் எந்த ஒரு விஷயத்தையும் முன்னதாக திட்டமிட்டு செய்வது மிகவும் சிறந்தது. அந்த வகையில் கருத்தரித்தல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எனவே அதற்கு தம்பதிகள் இருவரும் தேவையான உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருப்பது மிகவும் அவசியமாகும்.

தம்பதிகளின் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
பெண்கள் உடல் எடையின் பி.எம்.ஐ 30-க்கு மேல் இருந்தால், மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதற்கு உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் போன்ற முயற்சிகளை செய்ய வேண்டும்.

பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருந்தால், அது மாதவிலக்கு சுழற்சியை முறையற்றதாக மாற்றிவிடும். எனவே இப்பிரச்சனைக்கு மகப்பேறு மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற பின் கருத்தரிப்பதே சி0றந்தது.

தைராய்டு பிரச்னை தாயிக்கு இருந்தால், கருச்சிதைவு அல்லது குழந்தை பிறந்த பின் அறிவுத்திறன் பாதிப்பு, போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே கருத்தரிப்பதற்கு முன் தைராய்டு பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.

பெண்களுக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருந்தால், உடனடியாக மருத்துவரின் பரிசோதனையை நாட வெண்டும். ஏனெனில் தாய்க்கு ஏற்படும் விட்டமின் குறைபாடு குழந்தைக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி, பெண்கள் கருத்தரிப்பதற்கு, முன் ருபெல்லா மற்றும் கர்ப்பவாய் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசிகளை கட்டாயம் போட வேண்டும்.

ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் உடல் மற்றும் மனதளவில் ஃபிட்டாக இருப்பதை உணர்ந்த பின் கருத்தரிக்க வேண்டும். மேலும் மனம் மற்றும் உடல் ரீதியாக குழந்தையை சுமப்பதற்கான திறனை பெண் பெற்றிருக்க வேண்டும்.

தம்பதிகளுக்கு குழந்தை பிறந்த பின் எதிர்கொள்ளவிருக்கும் பொருளாதார செலவினங்களை கட்டாயமாக யோசித்து நன்றாக திட்டமிடுவது சிறந்தது.

உடலளவில் ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருக்கும் தொற்று நோயிற்கான பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அது குழந்தையை பாதிக்கும்.

பணிக்குச் செல்லும் தாயாக இருந்தால், விடுமுறை எத்தனை நாட்கள் கிடைக்கும், எவ்வளவு வாரங்கள், மாதங்கள் குழந்தையுடன் இருக்க முடியும் என்று குழந்தையின் பாதுகாப்பு குறித்து முன்கூட்டியே முடிவு செய்வது மிக அவசியம்.

தம்பதிகள் திட்டமிட்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் போது, தாய்மைக்காலம் மட்டுமின்றி வாழ்வு முழுவதும் குழந்தை வளர்ப்பு என்பது கணவன், மனைவி இருவருக்கும் பொதுவானது என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை குத்திக் கொன்ற கணவன்… காரணம் தெரிந்தால் கடுப்பாகிடுவீங்க..!!
Next post பட்ஜெட்டிற்குள்ளான அழகு குறிப்புகள்..!!