மறக்க முடியாத “செப்டம்பர்-11”

Read Time:3 Minute, 26 Second

USA.Sep-11.jpgசிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்தது போல அமெரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே தீவிரவாதிகள் நிலைகுலைய செய்த நாள் 2001 செப்டம்பர்-11. எல்லா நாட்களையும் போலத்தான் அன்று காலை அமெரிக்கா தனது பயணத்தை தொடங்கி சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டிருந்தது. காலை 8.45 மணி இருக்கும். நிïயார்க் நகரத்தில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடம் இரட்டை கோபுரங்களில் ஒன்றில் விமானம் ஒன்று மோதியது.

நிïயார்க் நகரில் பறவைகள் பறப்பது போல எப்போதுமே நிறைய விமானங்கள் பறந்து கொண்டிருக்கும். இதில் ஏதோ ஒன்று கட்டிடத்தில் தவறுதலாக மோதி விட்டதாக கருதினார்கள்.

அடுத்த 18-வது நிமிடத்தில் இன்னொரு விமானம் அடுத்த கோபுரத்தை நோக்கி வந்தது. அட இன்னொரு விமானமும் தாழ்வாக பறந்து வருகிறதேப என்னதான் நடக்கிறதுப என்று மூளை தனது யோசனை வேலையை தொடங்குவதற்குள் அந்த விமானம் அடுத்த கோபுரத்தில் டமார் என மோதி தீப்பிளம்பை கக்கியது.

அப்போதுதான் இது தீவிர வாதிகள் செயல் என்று அமெரிக்கா கண்டு கொண்டது. அடுத்த நடவடிக்கைக்கு தயா ராவதற்குள் 9.43 மணிக்கு மற்றொரு விமானம் வாஷிங் டனில் உள்ள ராணுவ தலைமையகமான பென்டகன் கட்டிடத்தை நொறுக்கியது.

அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையை தகர்க்க வந்த இன்னொரு விமா னம் பயணிகள் எதிர்ப்பால் 10.10 மணிக்கு தரையில் மோதி சிதறியது. விமானங்கள் மோதியதால் உலக வர்த்தக மைய கோபுரங் கள் இரண்டும் தரைமட்டமாகி விழுந்தது. அதில் மட்டும் 2749 பேர் சிக்கி உயிர் இழந்தனர்.

பென்டகனில் ராணுவ அதிகாரிகள் உள்பட 184 பேர் பலியானார்கள். இன்னொரு விமானம் விழுந்ததில் 40 பேர் உயிர் இழந்தனர். அன்றைய தீவிரவாதிகள் தாக்குதலில் மட்டும் இறந்தவர்கள் எண் ணிக்கை 2973.

சினிமா கற்பனையையும் மிஞ்சும் வகையில் விமானத்தையே ஆயுதமாக மாற்றி அமெரிக்காவை சின்னா பின்னாமாக்கி வெற்றி எக்காளமிட்டனர் பின்லேடனின் அல் கொய்தா தீவிரவாதிகள்.

இதற்கு பழிவாங்க புறப்பட்ட அமெரிக்கா ஆப்கானிஸ்தான், ஈராக் என அடுத்தடுத்து போர் தொடுத்து வெற்றி பெற்றாலும் அல்கொய்தா தீவிரவாதிகள் கொட்டத்தை அடக்க முடியவில்லை.

அடுத்த தாக்குதல் என்றைக்கு? எந்த மாதிரி வரும் என்று தெரியாமல் “திக், திக்” பயத்திலேயே காலத்தை கடத்தி கொண்டிருக்கிறது அமெரிக்கா.

USA.Sep-11.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முத்தக் காட்சிகளுக்கு இனிமேல் ‘சென்சார்’ கிடையாது
Next post சூர்யா-ஜோதிகா திருமணம் நடந்தது