ஒரே நாளில் உச்சம் தொட்டு `மெர்சல்’ டீசர் படைத்த சாதனை..!! (வீடியோ)

Read Time:1 Minute, 40 Second

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்’ படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே அதிகமானோரால் பார்கப்பட்டது. தற்போது வரை `மெர்சல்’ டீசரை 8,589,250 பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

`மெர்சல்’ டீசரை இதுவரை 6 லட்சத்து 72 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இதற்கு முன்னதாக அஜித்தின் விவேகம் படத்தின் டீசர் உலகளவில் அதிக லைக்குகளை பெற்ற டீசர் என்ற பெருமையை பெற்றிருந்தது. தற்போது அந்த சாதனையை `மெர்சல்’ டீசர் முறியடித்துள்ளது. இந்த லைக் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவேகம் படத்தின் டீசரை இதுவரை 5 லட்சத்து 99 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் விஜய் ஜோடியாக நடித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு `மெர்சல்’ ரிலீசாக இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இணையத்தை கலக்கும் காதல் ஜோடியை நாமும் வாழ்த்துவோம் வாழ்க பல்லாண்டு..!! (வீடியோ)
Next post கால்சியம் சத்து நிறைந்த உணவுகள்..!!