டி.ஆர் திட்டியதற்கு முதன் முறையாக பதில் அளித்த தன்ஷிகா..!! (வீடியோ)
Read Time:1 Minute, 12 Second
தன்ஷிகா பேராண்மை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதை தொடர்ந்து பரதேசி, அரவான், கபாலி என பல படங்களில் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.
இவர் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் விழித்திரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் டி.ஆர். தன்ஷிகா தன்னை அவமதித்துவிட்டார். என் பெயரை அவர் சொல்லவில்லை என்று சர்ச்சையாக பேசினார்.
அதை தொடர்ந்து தன்ஷிகா அழுது மன்னிப்பு கேட்டார், இதற்காக ரசிகர்கள் முதல் பல திரை நட்சத்திரங்கள் தன்ஷிகாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது டுவிட்டரில் அவர் ‘எனக்கு நடந்த விஷயத்திற்காக பலரும் தங்கள் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர், ஆனால், ஒரு பெண்ணின் பரிதாப நிலை இதுதான்’ என்பது போல் டுவிட் செய்துள்ளார்.
Average Rating