புளொட் மத்தியகுழு உறுப்பினர் கடத்தல் தொடர்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் விடுத்துள்ள பத்திரிகை அறிக்கை-

Read Time:3 Minute, 36 Second

paruka18.jpgPLOTE.T.s-plote-sit.bmpகடந்த 12.12.2005 அன்று முற்பகல் 11மணியளவில் புளொட்டின் மத்தியகுழு உறுப்பினரான சின்னத்தம்பி கணேசலிங்கம் என்கிற பாரூக் அவர்கள் வவுனியா முருகனு}ர் பகுதியில் உள்ள மாணிக்கபுரத்தில் வைத்து புலிகளால் கடத்திச் செல்லப்பட்டார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. பாரூக் கடத்தப்பட்டு இரு மணித்தியாலங்களுக்குள் கடத்தியவர்களில் மூன்று புலி உறுப்பினர்கள் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு இன்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களும் பொலீசாரால் கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள புலி உறுப்பினர்களின் வாக்குமூலங்களைக் கொண்டு கடத்தலில் ஈடுபட்ட புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் பேரின்பம் உட்பட பலர் பொலீசாரினால் தேடப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் எமது இயக்கத்தில் முன்பு இருந்து பின்பு புலிகளுடன் இயங்கிவரும் சலீம் என்பவரும் பாரூக் கடத்தலில் சம்பந்தப்பட்ட காரணத்தினால் பொலீசாரால் தேடப்பட்டு வந்தபோது வவுனியாவை விட்டே தப்பியோடி புலிகளின் பகுதிக்குள் வாழ்ந்து வருகிறார்.
இந்தநிலையில் இன்று (21.05.2006) புலிகளின் இணையதளங்களில் பாரூக் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது சுய விருப்பத்தில் வன்னிக்கு வந்து தஞ்சமடைந்ததாகவும் அங்கு ஒரு கிராமத்தில் அமைதியாக சாதாரண வாழ்க்கை நடத்துவதாகவும், இவ்வாறு இயல்பு வாழ்க்கையை பாரூக் வாழ்வதாக காட்ட முயற்சிக்கும் வகையில் பாரூக் அவர்களுடன் அவரது மனைவி தோன்றும் பல நிழற்படங்களும் மேற்படி புலிகளின் இணையதளங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
பாரூக் கடத்தப்பட்ட பின்பு அவரைத் தேடி வன்னிக்கு சென்ற அவரது மனைவியையும் புலிகள் அங்கு தடுத்து வைத்திருப்பதுதான் உண்மையாகும்.
இந்த இணையதளங்களின் செய்திகள் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி பாரூக் அவர்களை புலிகளே கடத்தியுள்ளார்கள் என்பதையும், வன்னியில் அவரை தடுத்து வைத்துள்ளார்கள் என்பதையும் ஆதாரப்படுத்துகின்றன.
இவரது விடுதலைக்கு சர்வதேச சமூகமும், மனித ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கப் போகிறோம் என்று கூறிக்கொள்ளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் அக்கறை செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றோம். என்று புளொட் தனது அறிக்கையில் கூறியுள்ளது. www.plote.org

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வன்னிப்புலிகளின் கிழக்குமாகாண இராணுவ புலனாய்வுத் தளபதியும் வன்னிப்புலிகளின் கிழக்குமாகாண பதில்தலைவருமான ரமணன் கருணாஅம்மானின் ரிஎம்விபியின் விசேட ஊடுருவித் தாக்கும் படையணியின் தாக்குதலில் பலி…..
Next post புளொட் மத்தியகுழு உறுப்பினர் பாருக் கடத்தலில் மாட்டிக்கொண்டு பூசிமெழுகும் புலிகள்