பற்றரியில் இயங்கும் புதிய வகை மோட்டார் சைக்கிள் அறிமுகம்..!!

Read Time:2 Minute, 53 Second

625.500.560.350.160.300.053.800.900.160.90ஆஸ்திரியாவை சேர்ந்த ஜோஹாமர் நிறுவனம் மிகவும் அழகிய தோற்றம் கொண்ட பட்டரி மோட்டார் சைக்கிளை வடிவமைத்துள்ளது.இதில் உள்ள பட்டரி பேக் மற்றெந்த வாகனத்திலும் உள்ளதைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமாகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் உடையதாகவும் காணப்படுகின்றன.

ஜே 1: 200 மற்றும் ஜே 1: 150 ஆகிய இரண்டு மொடல்களில் இவை வெளிவந்துள்ளன. இவை இரண்டின் அதிகபட்ச வேகம் மணிக்கு 120 கி.மீ. ஆகும்.மைய விசை ஈர்ப்பு அளவு 350 மி.மீ. அளவு இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சௌகரியமான பயணத்தை உறுதி செய்கிறது.

அத்துடன் ஹேண்டில்பார் மற்றும் கால்களை வைப்பதற்கான பகுதி அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.

ரியர் வியூ மிரர்: மற்றெந்த வாகனங்களில் உள்ளதைக் காட்டிலும் இது வித்தியாசமானது. பின்புறம் வரும் வாகனங்களை மட்டும் அது காட்டுவதில்லை.இந்தக் கண்ணாடியினுள் 2.4 அங்குல வண்ணத் திரை உள்ளது. இதில் வாகனம் செல்லும் வேகம், எச்சரிக்கை உள்ளிட்ட அனைத்துத் தகவலும் பளிச்சிடும்.

இந்த மோட்டார் சைக்கிளின் நீளம் 2.2 மீட்டராகும். இதன் உயரம் 1.2 மீட்டர். சக்கரத்தின் அகலம் 1.4 மீ.இதிலுள்ள மோட்டார் 11 கிலோவாட் மின்சாரத்தைத் தொடர்ந்து வெளியிடும். உச்சபட்ச சமயங்களில் இதன் வெளிப்பாடு 16 கிலோவாட்டாக இருக்கும்.

மின்னணு கட்டுப்பாடு மூலம் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இருப்பினும் 3 முதல் 5 விநாடிகளில் 80 கி.மீ. வேகத்தைத் தொட முடியும்.இதிலுள்ள பட்டரியின் திறன் 8.3 கிலோவாட்டாகும். இதை முழுவதும் சார்ஜ் செய்ய 2 மணி 20 நிமிடம் ஆகும். இதன் எடை 159 கிலோவாக காணப்படுகின்றது.

80 சதவீத அளவுக்கு சார்ஜ் செய்ய 90 நிமிடம் போதும். சில்வர், வெள்ளை, நீலம், மஞ்சள், பச்சை, ஆகிய நிறங்களில் இவை வெளிவந்துள்ளன. விரைவில் இலங்கையிலும் பாவனைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தன்னை தானே அசிங்கப்படுத்தி கொள்ளும் ஜூலி! வைரல் காணொளி..!!
Next post முட்டை சர்ச்சையில் நடந்தது என்ன தெரியுமா? கணேஷ் வெங்கட்ராமுடன் சிறப்பு பேட்டி..!! (வீடியோ)