அக்கா மகளிடம் சில்மிஷம்.. ஆசிரியரை கொன்றது ஏன்? இளைஞரின் பகீர் வாக்குமூலம்..!!

Read Time:3 Minute, 8 Second

தமிழகத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவரின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பித்த இளைஞர், பொலிசாரிடம் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை அடுத்த போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் கார்த்திகேயன் என்பவரை நேற்று காலை அடையாளம் தெரியத நபர் ஒருவர் பள்ளி வாசலிலேயே வைத்து பிளேடால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை துவங்கிய பொலிசார், போளூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரை கைது செய்தது.

இதனையடுத்து நடந்த விசாரணையில், ‘போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் தமது அக்கா மகள், அந்த சாரிடம் டியூஷன் படித்து வந்தார்.

டியூஷனுக்கு போகும்போதெல்லாம் ஆபாச வார்த்தைகளில் பேசுவது, பின்பக்கம் கை வைப்பது என ஆசிரியர் கார்த்திகேயன் சில்மிஷம் செய்து வந்துள்ளார்.இது தினமும் தொடரவே மனமுடைந்து போன சிறுமி முதலில் அந்த சாரின் மனைவியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் நான் கண்டிக்கிறேன் வெளியே யாரிடமும் சொல்லிடாத என கூறியுள்ளார்.

ஆனாலும் ஆசிரியரின் சில்மிஷம் தொடரவே, சிறுமி தமது தாயாரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.இதில் ஆத்திரமடைந்த அவரது தாயார் டியூஷன் அனுப்புவதை நிறுத்தியுள்ளார். இருப்பினும் பாடசாலையில் அந்த ஆசிரியரின் சில்மிஷம் தொடர்ந்துள்ளது.இதை தாங்கிக்கொள்ள முடியாமல் என்னிடம் வந்து அழுதுகொண்டே எனது அக்கா மகள் சொன்னது. என்னால் ஆத்திரம் தாங்க முடியவில்லை.

இதனையடுத்தே பாடசாலையில் சென்று ஆசிரியர் கார்த்திகேயனை தொடர்பு கொண்டு பேசியதாகவும், ஆனால் இந்த விவகாரத்தை பெரிது படுத்த வேண்டாம் என அவர் தெரிவித்தார்.ஆனால் தன்னால் கோபத்தை அடக்க முடியவில்லை என்பதால் கையில் வைத்திருந்த பிளேடு கத்தியால் அவர் கழுத்தை அறுத்தேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அஜித் பற்றி தவறாக பேசினேனா, ரம்யா விளக்கம்..!!
Next post சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து வெளியேறிய பிரபலம்..!!