உண்மையில் கடவுள்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? அதிரவைக்கும் தகவல்..!!

Read Time:3 Minute, 24 Second

தற்போதைய அறிவியல் உலகின் மிக முக்கியமான கேள்வி கடவுளின் இருப்பு உண்மையா? கடவுள்கள் எனப்படுபவர்கள் யார்? எங்கே உள்ளனர் என்பதே.இந்தக் கேள்விக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்டதே கடவுள், அதனை அறியவோ அல்லது, அளவிடவோ முடியாது. என்றாலும் அந்த சக்தியின் இருப்பு என்பது உண்மை, அதன் காரணமாகவே பிரபஞ்சம் இயங்குகின்றது என்ற பதில்கள் கிடைக்கும்.

எனினும் அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் தொல்பொருள் ஆய்வுகளின் அடிப்படையில், மனிதர்கள் தமது கடவுள்களாக வணங்கி வருகின்றவர்கள் வேற்றுக்கிரகவாசிகளே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நீண்டகாலமான பூமி மற்றும் வேற்றுக்கிரகங்கள் குறித்தும் தொல்பொருள் ஆய்வுகளிலும் ஈடுபட்டு வந்த ஜகரியா சிட்சின் (Zecharia Sitchin) எனப்படும் ஆய்வாளர் வேற்றுக்கிரகவாசிகளையே மனிதர்கள் கடவுள்களாக வணங்கி வருகின்றனர் என ஆய்வின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மனிதர்களும் தமது கடவுள்களாக வணங்கிவருகின்றவர்களை வானத்தில் உள்ள நட்சத்திரம் ஒன்றில் இருந்தே வருகைத் தந்தவர்களாக தெரிவித்து வருகின்றவர்கள்.அந்தவகையில் வேற்றுக்கிரகங்களில் இருந்து பூமிக்கு வந்தவர்கள் பண்டைய கால மக்களுக்கு நாகரீகம் மற்றும் கணிதம் போன்றவற்றினை கற்றுக்கொடுத்துள்ளார்கள். அவ்வாறு தமது தலைவர்களாக செயற்பட்டவர்களையே மனிதர்கள் தமது கடவுள்களாக வழிபட்டு வருகின்றனர் எனக் கூறியுள்ளார்.

மனிதர்களைப் பொறுத்தவரையிலும் Anunaki, Anunna, Ananaki,என்ற மூன்று கடவுள்களையே தமது ஆரம்பகாலத்தில் பிரதான கடவுள்களாக கொண்டு வணங்கி வந்துள்ளனர். இதற்காக ஆதாரங்கள் பண்டைய கால ஆய்வின் மூலம் கிடைத்துள்ளன எனவும் சிட்சின் தெரிவித்துள்ளார்.

தம்மை வழிநடத்திய வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்தவர்களை தமது கடவுள்களாக கொண்டு, அவர்களுக்கு அமைத்த பிரம்மாண்ட இருப்பிடங்கங்களே காலப்போக்கில் வழிபாட்டுத் தளங்களாக உருவெடுத்தன எனவும் சிட்சின் ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும், சிட்சின் தனது ஆய்வின் தகவல்கள் அனைத்தையும் திரட்டி பல புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.மதவாதிகள் மற்றும், ஆன்மீகவாதிகளுக்கு இந்த விடயங்கள் கோபத்தினை ஏற்படுத்துவதாக அமைந்தாலும் அறிவியல் ரீதியில் இதனை ஏற்றுக்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேடி வரும் படங்களை கீர்த்தி சுரேஷ் தவிர்ப்பதன் காரணம் இதுதானாம்?..!!
Next post மெர்சல் படத்தின் சிறப்பு விமர்சனம்..!! (வீடியோ)