கணவருக்கு கள்ளத்தொடர்பு ஆசிரியை தற்கொலை..!!

Read Time:1 Minute, 49 Second

இந்தியாவின் ஆலந்தூர் பகுதியில் கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் விரக்தியடைந்த ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை நங்கநல்லூர், 45வது தெருவில் வசிப்பவர் யுவராஜ். இவரது மனைவி வசந்தி (45). இவர், மகன் தனியார் பள்ளி ஆசிரியை. தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

யுவராஜுக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது. இதனால் விரக்தி அடைந்த வசந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பழவந்தாங்கல் பொலீசார், வசந்தியின் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையில் மகன் திலக் ஒரு புகார் அளித்தார். அதில், ‘‘என் தாய் சாவில் மர்மம் உள்ளதால் தந்தையிடம் விசாரணை நடத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் பழவந்தாங்கல் பொலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலர்களின் முக்கிய பிரச்சனையை சொல்ல​ ​வரும் ‘தொட்ரா’..!!
Next post கர்நாடகாவில் மோதல்: `மெர்சல்’ படம் திரையிடுவது நிறுத்தம்..!!