ரஜினி இல்லை, 2.0 வில் நடிக்க முதலில் இந்த நடிகரை தான் அனுகினாராம் ஷங்கர்..!!
Read Time:1 Minute, 19 Second
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சூப்பர்ஹிட் ஆன எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை லைகா 400 கோடி ருபாய் முதலீடு செய்து தயாரித்து வருகிறது. அதில் ரஜினி, அக்ஷய் குமார் எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் ரஜினி நடிக்கும் வேடத்தில் நடிக்க ஷங்கர் முதலில் பாலிவுட் நடிகர் அமீர்கானை தான் அணுகினாராம். ஆனால் இந்த கதையில் ரஜினியை விட யாரையும் நினைத்து கூட பார்க்க முடியாது என கூறி அமீர் கான் நடிக்க மறுத்துவிட்டாராம்.
“ஷங்கர் என்னிடம் கதை கூறியபோது ஒவ்வொரு சீனுக்கும் ரஜினி தான் என் கண்முன் வந்து செல்வார். அதனால் அவர் தான் நடிக்கவேண்டும் என ஷங்கரிடம் கூறினேன். இந்த படம் நிச்சயம் பிளாக் பஸ்டர், அனைத்து சாதனைகளும் இந்த படம் தகர்க்கும் – அதில் எந்த சந்தேகமும் இல்லை” என அமீர் கான் தெரிவித்துள்ளார்.
Average Rating