பிரபுவுடன் போட்டி போட்டு நடித்தேன்: பிரசாந்த்..!!

Read Time:2 Minute, 14 Second

சாஹசம்’ படத்துக்கு பிறகு பிரசாந்த் நடிக்கும் படம் ‘ஜானி’. ஸ்டார் மூவிஸ் சார்பில் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்துடன் பிரபு, சஞ்சிதாஷெட்டி, ஆனந்தராஜ், கலைராணி உள்பட பலர் நடிக்கிறார்கள். வெற்றிச்செல்வன் இயக்குகிறார்.

இதில் நடித்தது பற்றி கூறிய பிரசாந்த்… “இந்த படத்தில் நான் இதுவரை நடிக்காத பாத்திரத்தில் நடிக்கிறேன். நான் மட்டும் அல்ல மற்றவர்களும் அப்படித்தான். பிரபு இதற்கு முன்பு நடிக்காத ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபு சாருடன் நடிக்கும்போது மிகவும் பயத்துடன் நடித்தேன். கேமராவுக்கு பின்னால் கலகலவென ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருப்பார்.

கேமராவுக்கு முன்னால் அப்படியே கேரக்டராக மாறி விடுவார். ஒவ்வொரு காட்சியிலும் அவர்தான் முன்னணியில் இருப்பார். அவருக்கு சமமாக நிற்க வேண்டும் என்பதற்காகவே, அவரை போட்டியாக நினைத்துக் கொண்டு நடித்தேன். நான் நன்றாக நடிக்கும்போது என்னை தட்டிக் கொடுத்து பாராட்டுவார்.

சஞ்சிதா ஷெட்டிக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும். இது ஆக்‌ஷன் திரில்லர் படம். ஹாலிவுட் தரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. 17 செட்டுகள் போட்டு இந்த படம் எடுக்கப்பட்டது. வசன காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. பாடல் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. இது ரசிகர்கள் விரும்பும் வித்தியாசமான படமாக இருக்கும்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசியல் கைதிகளை மறந்து மோதிக்கொள்ளும் அரசியல்வாதிகள்..!! (கட்டுரை)
Next post இறந்த குழந்தைகளை மரத்தில் துளையிட்டுப் புதைக்கும் விநோத சடங்கு..!! (வீடியோ)