பெண்களின் ஆர்வத்தை தூண்டும் ஆர்ட் சில்க் லெஹன்கா..!!

Read Time:5 Minute, 20 Second

இளவயது மங்கையர் புதிய புதிய வடிவமைப்பு ஆடைகளின் மீதுதான் அதிக கவனம் பதியும். பெண்கள் தங்களுக்கு ஏற்ற புது வரவு ஆடைகளை தேர்வு செய்து வாங்குவதில் அலாதி இன்பம். புதிய ஆடை வடிவமைப்பு என்பது நிறுவனங்களுக்கு நிறுவனங்கள் மாறுபடுகின்றன.

பெரிய ஆடை உலக வியாபார கடைகள் என்பது மட்டுமின்றி பரந்து இணையதள வியாபார ஆடை விற்பனையகங்களுக்கு ஏற்ற புதிய வடிவமைப்பு மற்றும் மாற்றங்களுடன் கண்கவர் வண்ணம், நேர்த்தியான எம்பிராய்டரி, வெவ்வேறு வகையான வெட்டுகள் என புதுமைகள் ஆடையின் ஒவ்வொரு பாகத்திலும் பாய்ச்சப்படுகின்றன. இதற்கென விழா கால புதிய வடிவமைப்பு நிபுணர்கள் சிறப்புடன் பணியாற்றி புதிய கண்கவர் ஆடைகளை வடிவமைத்து தருகின்றனர்.

புதிய டிசைன் லெஹன்காக்கள் :

பெண்களின் பாரம்பரிய ஆடைகளில் லெஹன்காசு தனிசிறப்பு மிகு ஆடையாக விளங்குகிறது. இதற்கென புதிய துணிரகம், புதிய மேற்புற டிசைன், கை அமைப்பு மாறுபாடு, வண்ண பிரகாசம் என அனைத்தும் புதுமையுடன் உருவாக்கப்படுகின்றன. தற்போது ஆர்ட் சில்க் ஜாக்கெட் லெஹன்கா, ஆர்ட் சில்க் சுழல் லெஹன்கா, பனாரஸ் லெஹன்கா போன்றவையுடன் நெட், ஜார்கெட், வெல்வெட், பட்டு, லெஹன்காக்களும் வந்துள்ளன.

புது வரவான ஆர்ட் சில்க் லெஹன்காவில் ஜாக்கெட் மற்றும் சுழலி லெஹன்கா சில மாற்று வடிவமைப்புகள் உள்ளவாறு புதுபொலிவுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆர்ட் சில்க் ஜாக்கெட் லெஹன்கா :

இதனை புல்சூட் லெஹன்கா என்றும் கூறுவர். அதாவது மேற்புற ஜார்கெட் என்பது முழு கோட் அமைப்பில் ஏராளமான மாறுபட்ட வெட்டுகளுடன் உருவாக்கப்பட்டு உள்ளது. நீளமான மற்றும் முக்கால் கை நீளம் உள்ளவாறு முட்டி பகுதி வரை நீண்ட ஜாக்கெட் போன்ற மேல் சட்டை. இதில் முன்பக்கம் முழுவதும் அழகிய கண்கவர் சரிகை எம்பிராய்டரி மற்றும் பூவேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சில ஜாக்கெட் அமைப்பு தொடை பகுதி வரை நீண்ட அமைப்புடன் உள்ளது.

இதற்கேற்ற பாவாடை அமைப்பு நீள்வடிவில் அதிக பிரில்கள் மற்றும் விஸ்தாரமாய் விரிந்த அமைப்பு உள்ளவாறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில், பாவாடை என்பது பெரும்பாலும் தங்க நிற சல்லடை அமைப்பில் உட்புறம் சில்க் துணி பின்னணி உள்ளவாறு ஜொலிக்கின்றன. இதற்கேற்ற ஒற்றை வண்ணம் மேல்சட்டையில் மாறுபட்டவாறு உள்ளன. அழகிய பால் சான்டூன் லைனிங் என்பது கண்கவர் சரிகை எம்பிராய்டரி, கல் மற்றும் பேட்ச் பார்டர் வேலைப்பாடு பூ வடிவத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ட் சில்க் ஜாக்கெட் லெஹன்கா என்பது சல்வார் கமீஸ்-யின் மேல் சட்டை அமைப்பு, லெஹன்கா பாவாடை கலந்த கண்கவர் ஜொலி ஜொலிப்பு ஆடை.

ஆர்ட் சில்க் சுழலி லெஹன்கா :

இது குட்டையான பாவாடை ஜாக்கெட் அமைப்புடன் இருக்கும். இதன் பாவாடை மட்டும் குடை விரிந்து அதே நேரம் சுழல் வடிவில் உள்ளவாறு உருவாக்கப்பட்டு உள்ளது. குட்டை ஜாக்கெட் என்பதுடன் குட்டை கை மற்றும் நீண்ட கை உள்ளவாறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், மேற்புற ஜாக்கெட் மற்றும் பாவாடை இரண்டும் ஒரே டிசைன் மற்றும் வண்ணத்தில் உள்ளவாறு வடிவமைப்பு செய்யப்பட்டு உள்ளது.

பாவாடை அதிக மடிப்புகள் இன்றி இடுப்பு பகுதியில் இறுக்கத்துடன் கீழ் இறங்க இறங்க விரிந்தவாறு சுழல் அமைப்பில் உருவாக்கப்பட்டள்ளது. இதிலும் சரிகை எம்பிராய்டரி, கல் மற்றும் கோட்டாபட்டி வேலைப்பாடுகள் கூடுதல் மெருகுடன் செய்யப்பட்டுள்ளன. ஆர்ட் சில்க் ஜாக்கெட் மற்றும் சுழல் லெஹன்கா இந்த பண்டிகை காலத்தில் இளவயது பெண்களுக்கான புதுவரவாக வந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது இவ்வளவு ஈஸியா…?..!!
Next post கேரளா: ஆம்புலன்ஸ் வேனுக்கு வழிவிடாமல் சென்ற வாகன ஓட்டுனர் கைது..!! ( வீடியோ)