உலகின் அவலட்சணமான பெண்..!! (வீடியோ)

Read Time:2 Minute, 29 Second

உலகின் அவலட்சணமான பெண் என யூடியூபில் வெளியான வீடியோ பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டது. இந்த வீடியோவைப் பார்த்தது மட்டுமல்லாது, தமது மனதில் எழுந்த மோசமான எண்ணங்கள் அனைத்தையும் கமென்ட்டில் கொட்டித் தீர்த்திருந்தனர்.

லிசி வேலாஸ்க்கேஸ் (26) என்கிற இந்தப் பெண் பிறக்கும்போதே ஒரு கண்ணில் பார்வையின்றி, அரியவகை வியாதியால் உடலில் எடை கூடாமலே போகும் பிரச்சனையுடன் பிறந்துள்ளார். இதனால், மிக மிக ஒல்லியாக தோற்றமளிக்கின்றார். ஆகவே, பல பேரால் சிறு வயது முதலே அவலட்சணமானவள் என்றே கிண்டல் கேலி செய்யப்பட்டு வந்தார்.

சில ஆண்டுகள் முன்பு, எதேச்சையாக, லிசி ‘உலகின் அவலட்சணமான பெண்’ எனப் பெயரிடப்பட்ட, இந்த யூடியூப் பதிவைப் பார்க்க நேர்ந்தது. அதில் அவரை அவலட்சணமாகப் பிறந்த உனக்கு வாழத் தகுதியில்லை. ஆகவே, தற்கொலை செய்துகொள்! என வெளியிடப்பட்ட பல்வேறு கருத்துக்களைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.

இளம்வயது முதலே எத்தனையோ பேரின் விஷம் போன்ற வார்த்தைகளைக் கேட்டு வளர்ந்த லிசி ‘என்னை யாரோ என்னவோவென வரையறுப்பதால், நான் அப்படி மாறப்போவதில்லை’ என மன உறுதியுடன் சொல்கிறார்.

தற்போது பல்வேறு நாடுகளுக்குப் பயணித்து பள்ளிக் குழந்தைகளிடம், இதுபோன்ற சிறு சிறு கேலி, கிண்டல்கள் எப்படி இன்னொருவர் மனதைப் புண்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

தனது வாழ்க்கைப் பாதையைப் பற்றி புத்தகங்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ள லிசி, தற்போது இதே வரிசையில் வாழ்க்கைப் பயணம் தொடர்பான ஒரு ஆவணப்படத்திலும் தோன்றியுள்ளார்.அழகாக இருப்பவர்களுக்கு மட்டுமா இந்த உலகம்?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post `மெர்சல்’ படத்தில் எதிர்ப்புக்குள்ளான காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு முடிவு..!!
Next post ‘காலா’ ரிலீஸ் குறித்து மனம்திறந்த பா.ரஞ்சித்..!!