சத்தமாக பேசியதை கண்டித்த சிறுமியை தாக்கிய இளைஞர் – வைரலாகும் வீடியோ..!!

Read Time:1 Minute, 42 Second

மகாராஷ்டிரா மாநிலம் தலைநகரான மும்பையில் உள்ள நேக்ரு நகரில் கடந்த செவ்வாய் கிழமை சிறுமி ஒருவர் தனது தோழியுடன் தையல் வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த இம்ரான் ஷாகித் ஷேக் என்பவர் தனது நண்பர்களுடன் சத்தமாக பேசிக்கொண்டிருந்தார்.

அவரை மெதுவாக பேசும் படி சிறுமி கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த இம்ரான் அச்சிறுமியை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். ஆனால் அதனை அருகில் இருந்த மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். யாரும் உதவி செய்யவில்லை.

சிறுமியின் உடனிருந்த தோழி அவரின் பெற்றொருக்கு தகவல் அளித்துள்ளார். அவர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இம்ரானை கைது செய்தனர். ஆனால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இளைஞர் சிறுமியை தாக்கியது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாவித்ரி வேடத்தில் நடிப்பது பெருமை: கீர்த்தி சுரேஷ்..!!
Next post பணத்துக்காக படங்களில் நடிக்க மாட்டேன்: அனுஷ்கா..!!