எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் `சங்கமித்ரா’வாக தேர்வாகிய பாலிவுட் நடிகை..!!

Read Time:1 Minute, 53 Second

சுந்தர்.சி இயக்கத்தில் `சங்கமித்ரா’ பிரமாண்ட படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்யா மற்றும் ஜெயம் ரவி ஒப்பந்தமாகி இருக்கின்றனர். `சங்கமித்ரா’வாக நடிக்க தேர்வு செய்யப்பட்டிருந்த சுருதி ஹாசன் சில காரணங்களால் படத்தில் இருந்து வெளியேறியதால் `சங்கமித்ரா’ கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தேர்வு நடந்து வந்தது.

`சங்கமித்ரா’வாக நடிக்க பாலிவுட் நடிகை திஷா படானி தேர்வு செய்யபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், தற்போது அது உறுதியாகி இருக்கிறது.

நடிகை தேர்வு தாமதமானதால் சுந்தர்.சி தற்போது `கலகலப்பு-2′ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்த பிறகு `சங்கமித்ரா’ பட பணிகளை சந்தர்.சி தொடங்க இருக்கிறார். தற்போது `சங்கமித்ரா’ படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த பணிகள் முடிந்த பிறகு டிசம்பர் முதல் `சங்கமித்ரா’ படததின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ தோனண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனி பல்லை காட்டினாலே பணம் கிடைக்கும்… ஏ டி எம் கார்டுக்கு டாட்டா..!!
Next post ஓவியாவின் இந்த குணத்திற்காக தான் இவ்வளவு ரசிகர்கள்..!! (வீடியோ)