மெர்சல் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: நடிகர் ரஜினிகாந்த்..!!

Read Time:2 Minute, 10 Second

முக்கிய பிரச்சினையை விவாதித்த மெர்சல் படக்குழுவினருக்கு பாராட்டுகள் என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க மேற்கண்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியது.

இதனையடுத்து, மெர்சல் திரைப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிடோர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனால் மெர்சல் விவகாரம் தேசிய அளவில் ட்ரெண்டிங் அடித்து வருகிறது. மேலும், தமிழ் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் மெர்சலுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மெர்சல் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மெர்சல் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் டுவிட்டருக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்து, உங்கள் ஆதராவுக்கு நன்றி என பதில் டுவிட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முடி வளர்ச்சிக்கு வெந்தய குளியல்..!!
Next post பாடசாலை செல்லும் பூனை: சிறந்த மாணவருக்கான விருதையும் பெற்றது..!!