அஜித் படத்தில் வேலைக்காரியாக நடிக்க தயார்: ஓவியா..!!
ஓவியா டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். ரசிகர்களுடன் நடனம் ஆடி மகிழ்ந்தார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ஓவியா அளித்த பதில்…
“தினமும் எனக்கு தீபாவளிதான். தனியாக தீபாவளியை கொண்டாடுவது இல்லை. எப்போது நினைக்கிறேனோ அப்போது தீபாவளியை கொண்டாடுவேன். நான் பல படங்களில் நடிப்பதாக செய்திகள் வருகிறது. ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க முடியாது. தற்போது நான் ‘காஞ்சனா’ படத்தின் அடுத்த பாகத்தில் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் எந்த போட்டியிலும் இல்லை.
நான் எனது வருமானத்துக்காக வேலை தேடியபோது மாடலிங் செய்தேன். பின்னர் ‘களவாணி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகை ஆனேன். ரசிகர்கள் ஆதரவால் இந்த அளவு வளர்ந்திருக்கிறேன்.
இப்போது எனக்கு ஒரு பார்ட்னர் இருக்கிறார். அவர் எனது தாய். தளபதி விஜய், தல அஜித் இருவரும் எப்போதும் மாஸ்தான். அவர்கள் இரண்டு பேர் மட்டுமல்ல எல்லோரையும் பிடிக்கும்.
அஜித் படத்தில் எந்த பாத்திரத்திலும் நடிக்க தயார். வேலைக்காரியாக கூட நடிப்பேன்”.
Average Rating