மனைவி புகார் எதிரொலி: தாடி பாலாஜி போலீஸ் அதிகாரி முன் ஆஜர்..!!

Read Time:1 Minute, 22 Second

சினிமா மற்றும் டி.வி. தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் தாடி பாலாஜி. இவரது மனைவி நித்யா. இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.

இந்த நிலையில் தாடி பாலாஜி குடித்துவிட்டு வந்து தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் ஏற்கனவே அவருக்கு திருமணமாகிவிட்டதை என்னிடம் இருந்து மறைத்து விட்டார் எனவும் 2 மாதங்களுக்கு முன்பு போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் அவரது மனைவி நித்யா புகார் அளித்து இருந்தார்.

அதன்மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் அண்ணாநகரில் உள்ள போலீஸ் துணை கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அவரிடம் போலீஸ் துணை கமி‌ஷனர் டாக்டர் சுதாகர் விசாரணை நடத்தினார். இது சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக நடந்தது. அப்போது தாடி பாலாஜியுடன் அவரது வக்கீல் இருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்ப காலத்தில் ஏற்படும் கூந்தல் உதிர்வு..!!
Next post பட்டப்பகலில் நடைபாதையில் கற்பழிக்கப்பட்ட பெண்: கண்டும் காணாமல் போன பொதுமக்கள்..!!