தந்திர இயக்குனருடன் இணைந்த அதர்வா..!!

Read Time:2 Minute, 18 Second

‘ஜெயங்கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன், சமீபத்தில் ‘இவன் தந்திரன்’ என்ற படத்தை இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்திருந்தார். ஸ்ரதா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்திருந்தார். ‘இவன் தந்திரன்’ பல தடைகளை தாண்டி வெற்றி பெற்றது. கண்ணன் அடுத்ததாக அதர்வாவை வைத்து படம் இயக்க இருக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் ஆர்.கண்ணன் பேசுகையில், ”இது ஒரு மிக விறுவிறுப்பான சுவாரஸ்யமான ஸ்கிரிப்ட்டாகும். எல்லா கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்துள்ள ஒரு ஆக்ஷன் ட்ராமா இது. கதாநாயகனாக அதர்வா நடிக்க உள்ளதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

இந்த கதாபாத்திரத்திற்கு அதர்வா மட்டுமே மிக பொருத்தமாக இருப்பார். அவரது சினிமா பயணத்தில் இது ஒரு ஸ்பெஷல் படமாக நிச்சயம் இருக்கும். எல்லா தரப்பட்ட கதைகளிலும் ஜொலிப்பவர் என பெயரெடுத்துள்ள அதர்வா இப்படத்திற்கு பலமாக இருப்பார். கதாநாயகி மற்றும் மற்ற துணை கதாபாத்திரங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம். கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுளோம்”.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இசையமைப்பாளர் ரதன் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிரசன்னா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இயக்குனர் ஆர்.கண்ணனின் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனமும் எம்.கே.ராம்பிரசாத்தின் ‘MKRP’ நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐந்தெழுத்து மந்திரம்… இதன் ரகசியம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?..!! (வீடியோ)
Next post உடை மாற்றும் போது படம் பிடித்த வாலிபர்… பிரபல சீரியல் நடிகை திடீர் கதறல்..!!