இளம்பெண்ணை போதைக்கு அடிமையாக்கி தனது இல்லத்தில் வைத்து பாலியல் தொந்தரவு..!!

Read Time:4 Minute, 9 Second

இலங்கையை சேர்ந்த ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
எனது 23 வயது மகள் திருச்சியில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்து அழகுக்கலை நிபுணராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூலை மாதம் சென்னை செல்வதாக கூறி சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.இதுகுறித்து திருச்சி போலீசில் புகார் செய்தேன்.

இதற்கிடையே சுமித்ரா என்பவர் என்னை தொடர்பு கொண்டு தனது சகோதரன் மிதுன் சீனிவாசனும், எனது மகளும் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.

இந்தநிலையில் திருச்சி போலீசார், சென்னையில் நடிகை புவனேஸ்வரியின் கட்டுப்பாட்டில் இருந்த எனது மகளை மீட்டு கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி என்னிடம் ஒப்படைத்தனர்.அப்போது, மிதுன் சீனிவாசன் தனக்கு முகநூல் மூலம் அறிமுகம் ஆனதாகவும், அவரது பேச்சில் மயங்கி சென்னை சென்றதாகவும், அங்கு நடிகை புவனேஸ்வரியின் வீட்டில் வைத்து தன்னை போதைக்கு அடிமையாக்கி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் எனது மகள் தெரிவித்தார்.

மேலும் நடிகை புவனேஸ்வரி, தனக்கு மதுவை தந்து, தன்னை பாலியல் உறவில் ஈடுபட வைத்தாகவும். தாம் லெஸ்பியன் உறவில் ஈடுபட்டதாகவும் அந்த இலங்கைப் பெண் தெரிவித்துள்ளார்
இந்நிலையில் ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி முதல் எனது மகளை மீண்டும் காணவில்லை. இதுதொடர்பாக சென்னை வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தேன். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடிகை புவனேஸ்வரியின் பிடியில் எனது மகள் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே, எனது மகளை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ராஜீவ் சக்தேர், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மகள் நேரில் ஆஜராகி தனக்கும், மிதுன் சீனிவாசன் என்பவருக்கும் திருமணம் நடந்து விட்டதாகவும், தற்போது அவருடன் சென்னையில் வசித்து வருவதாவும் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஏற்கனவே நடிகை புவனேஸ்வரி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவரது கட்டுப்பாட்டில் தான் மனுதாரரின் மகள் உள்ளார். அவரை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி சுய நினைவை இழக்க செய்துள்ளனர்’ என்று குற்றம் சாட்டினார்.

இதைதொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கில் உண்மையை அறிய நடிகை புவனேஸ்வரி நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த முறை உத்தரவிட்டும் ஏன் அவர் ஆஜராகவில்லை என்று கண்டனம் தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்கை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளிவைப்பதாகவும், அன்றைய தினம் நடிகை புவனேஸ்வரி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

போதைக்கு அடிமையான இந்த இலங்கைப் பெண், மீண்டும் நடிகை புவனேஸ்வரி வீட்டுக்கு ஓடி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொங்கல் ரேசில் களமிறங்கும் விமல்..!!
Next post ஜோதிகா கார்த்திக்கு செய்த துரோகம்!! கொந்தளிக்கும் சிவகுமார் குடும்பம்….!! (வீடியோ)