மனைவிகளை மாற்றி உல்லாசம்.. கடைசியில் நடந்த விபரீதம்…!!

Read Time:7 Minute, 1 Second

மனைவிகளை மாற்றி உறவு (wife-swapping) வைத்துக் கொண்டதால் இரு குடும்பங்களின் வாழ்க்கை எப்படி சிக்கலில் சின்னாபின்னமானது என்பதற்கு பெங்களூரில் நடந்துள்ள இந்த சம்பவம் நல்ல உதாரணம். பெங்களூரின் வசதியான ஒரு பகுதியை சேரந்தவர் அபிஷேக், இவரது மனைவி மானஷி. அபிஷேக் கான்ட்ராக்டராகவும், மானஷி ஆசிரியையாகவும் வேலை பார்த்தனர். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள போன இவர்களுக்கு பழக்கமானவர்கள் கணேஷ் அவரது மனைவி கவிதா. கணேஷ் தொழிலதிபராகும். கவிதா வீட்டில் இருந்தார். இரு தம்பதிகளுக்கிடையேயான பழக்கம் நாளடைவில் மிக நெருங்கிய பழக்கமாக மாறியது.

கணேஷ் அடிக்கடி தொழில்நிமித்தமாக வெளியூர் செல்வார் என்பதால், அந்த நேரத்தில், ஷாப்பிங் செல்லவோ அல்லது வேறு எங்காவது செல்ல வேண்டும் என்றாலோ அபிஷேக்கை அழைத்துக் கொண்டு செல்வது கவிதாவின் பழக்கமாக இருந்துள்ளது. மானஷியும் கூட தனது கணவன் கவிதாவுடன் நல்ல நட்புறவுடன் இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் கவிதாவுக்கும், அபிஷேக்குக்கும் நடுவே இருந்த நெருக்கம் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. கவிதாவின் வீட்டிற்கு வரும் அபிஷேக் அவருடன் உல்லாசமாக இருப்பது வழக்கமாகிப்போயுள்ளது. கள்ளக்காதலையும், கர்ப்பத்தையும் மூடி வைக்க முடியுமா என்ன? இந்த தகவல் கணேஷுக்கு தெரிந்து விட்டது. இந்த விஷயம் தெரிந்ததும், நண்பனையும், மனைவியையும் வெட்டிக் கொன்றுவிடுவது என்றோ, அல்லது மனைவியை விவாகரத்து செய்வது என்றோ கூட கணேஷ் நினைக்கவில்லை. குறைந்தபட்சம் கோபப்பட்டு மனைவியிடம் சண்டை கூட போடவில்லை. அதே நேரம் கணேஷ் சும்மா இருந்துவிடவும் இல்லை.

கணேஷ் என்ன செய்தார் தெரியுமா… நடக்கும் கொடுமைகளையெல்லாம் மானஷியிடம் சென்று கொட்டி தீர்த்துள்ளார். மானஷியிடம் கலந்து பேசிய கணேஷ், நாமும் கலந்துவிடலாமே என்று கேட்டுள்ளாரே பார்க்கலாம். மானஷி ஆசிரியையாயிற்றே.. பிறருக்கு புத்தி சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பவராயிற்றே.. நமது கோரிக்கைக்கு என்ன மாதிரி எதிர் விளைவு ஏற்படுமோ என்றெல்லாம் கணேஷ் யோசிக்கவில்லை. ஆனால், அவர் அதை யோசிக்க மானஷியும் வாய்ப்பு தரவில்லை. ‘பட் இந்த டீலிங் எனக்கு புடிச்சிருக்கு’ என்று சொல்லிவிட்டாராம். அப்புறம் என்ன..? கணேஷ் வீட்டில் அபிஷேக்கிற்கும், அவரது வீட்டில் கணேஷுக்கும் விருந்துகள் தடபுடலாக நடந்துள்ளன.

உள்ளூரிலேயே மனைவியை மாற்றி ஜாலியாக இருந்தால் எப்படி..? புது தம்பதிகள் (!) இல்லையா..? ஹனிமூன் வேண்டாமா. இதற்காகவே ஜோடிகள் சிங்கப்பூர், துபாய்க்கு பறந்து சென்று அங்குள்ள ஹோட்டல்களிலும் களியாட்டங்களை அரங்கேற்றி சந்தோஷப்பட்டுள்ளனர். 40 வயதுக்கு மேற்பட்ட இந்த தம்பதிகள் நால்வருமே இப்படி உல்லாசமாக இருக்கும்போது அவர்களுக்கு பிறந்த குழந்தைகளை பெங்களூரிலேயே விட்டுச் செல்வது வாடிக்கை.

காதல் என்றால் வில்லன் வராமலா இருப்பார். அதுவும் இது கள்ளக்காதலாயிற்றே. இவ்வாண்டின் தொடக்கத்தில் மாரடைப்பால் அபிஷேக் திடீரென இறந்துவிட இவர்கள் கள்ளக்காதல் வாழ்க்கையிலும் புயல் வீசத்தொடங்கியுள்ளது. மானஷி டீச்சர் ஆயிற்றே. கணக்கை கச்சிதமாக போட்டுள்ளார். அபிஷேக் இல்லாமல், கணேஷை நம்மிடம் ஜாலியாக இருக்க கவிதா விடமாட்டார். எனவே கவிதாவை கெஞ்சிக்கொண்டே கணேஷை அனுபவிக்க வேண்டிய நிலைதான் நமக்கு வரும். எதற்கு தலையை சுற்றி மூக்கை தொடுவானேன். அந்த கணேஷையே நாம சொந்தம் கொண்டாடிட்டா….? என்று யோசித்தார் மானஷி.

இதுகுறித்து மெதுவாக கணேஷிடம் பேசிப்பேசி மனதை கரைத்தும் விட்டார் மானஷி. இதையடுத்து மானஷியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கவிதாவிடம் கூறியுள்ளார் கணேஷ். ஏற்கனவே கள்ளக்காதலன் அபிஷேக் இறந்துவிட்ட துக்கத்தில் இருந்த கவிதாவுக்கு, இருக்கும் ஒரு ஆளையும் விட மனதில்லை. “முடியாது… கல்லானாலும் நீங்கள்தானே என் கணவன்” என்று உருகியுள்ளார் கவிதா. இதெல்லாம் சரிபட்டு வராது என்று நினைத்த கணேஷ் பெங்களூர் குடும்ப நல கோர்ட்டில் கவிதாவை டைவர்ஸ் செய்ய அனுமதி கேட்டு வழக்கு போட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கணவனுக்கும் மனைவிக்கும் கவுன்சலிங் கொடுப்பதற்காக பெண்கள் உதவி மையத்திற்கு பரிந்துரைத்தது. அங்கு சீனியர் ஆலோசகர் சரஸ்வதி, கணவன், மனைவியிடம் தனித்தனியாக கவுன்சலிங் நடத்தியபோதுதான், மனைவி-கணவன் பண்டமாற்று முறை அம்பலத்திற்கு வந்தது. இதையடுத்து மானஷியையும் அழைத்து கவுன்சிலிங் கொடுத்துள்ளார் சரஸ்வதி. இருப்பினும், மூவருமே தங்கள் நிலையில் அப்படியே இருக்கிறார்களாம். கவுன்சலிங் தோல்வியில் முடிந்த நிலையில், கோர்ட் எடுக்கப்போகும் முடிவை எதிர்நோக்கி உள்ளனர் இம்மூவரும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜூனியர் வடிவேலு இவர்தான்! வைரலாகும் காணொளி..!!
Next post கணவன் – மனைவி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை..!!