ஹார்வர்டு இருக்கைக்காக ஏ.ஆர்.ரகுமான் நிதியுதவி..!!

Read Time:1 Minute, 28 Second

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்காக 25000 டாலர்களைக் கடந்த வாரம் தனது இசை நிகழ்ச்சியின்போது வழங்கியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக உலகெங்கும் உள்ள தமிழர்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர். தமிழக அரசு ரூ. 10 கோடியை நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானும் தன் பங்களிப்பாக 25 ஆயிரம் டாலர்களை வழங்கியுள்ளார்.

கனடாவின் டொரன்டோ நகரில் கடந்த அக்டோபர் 20-21 தேதிகளில் ரகுமானின் இசைக் கச்சேரி நடந்தது. தமிழ் பாடல்கள் கச்சேரி 21-ம் தேதி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் திரண்ட பணத்தில் ஒரு பகுதியாக ரூ.25 ஆயிரம் டாலர்களை ஹார்வர்டு தமிழ் இருக்கை நிதிக்காக வழங்கினார் ரகுமான். “இது ஒரு சிறு பங்களிப்புதான். ஆனால் உலகத் தமிழர்கள் இந்த நிதிக்கு தங்களால் ஆன பங்களிப்பைத் தர வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறேன்,” என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியிருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேர்தல்கள் தமிழர் எதிர்பார்க்கும் தீர்வைப் பிற்போடுமா?..!! (கட்டுரை)
Next post நவம்பர் 24ம் தேதி சென்னை 2 சிங்கப்பூர் அழைத்து செல்லும் அப்பாஸ் அக்பர்..!!