துணை நடிகை தற்கொலை: `தேவர்மகன்’ படத்தில் நடித்தவர்

Read Time:2 Minute, 30 Second

Sucide.1.jpgவட பழனி பக்தவச்சலம் காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் பிரியதர்சினி(வயது 19) துணை நடிகை. எத்திராஜ் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். சிவாஜி, கமலஹாசன் நடித்த `தேவர்மகன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். சிறிய கேரக்டரிலும், கதாநாயகிக்கு தோழியாகவும் பல படங்களிலும் நடித்துள்ளார்.

நேற்று காலை பிரியதர்சினி படுத்து இருந்த அறைக் கதவு நீண்டநேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அவரது தாயர் ஹேமாவதி சந்தேகம் அடைந்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார். அங்கு பிரியதர்சினி தூக்கில் தொங்கியபடி பிண மாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். துப்பட்டாவால் மின்விசிறியில் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வடபழனி இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பிரியதர்சினிக்கு பவானி என்ற சகோதரி உள்ளார். இலங்கையில் திருமணமாகி குடும்பத்துடன் அங்கு உள்ளார். சகோதரி மீது அவருக்கு மிகுந்த பாசம்.

சமீபத்தில் பவானியின் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் விழா நடந்தது. இதற்கு பிரியதர்சினியையும், தாயாரை யும் அழைக்க வில்லை. திருமணத்திற்கு முன்பு தனது சகோதரி மிகவும் பாசமாக இருந்தார். பின்னர் மறந்து விட்டாளே என்று வருத்தப் பட்டு பிரியதர்சினி அடிக்கடி பேசி இருக்கிறார்.

இதனால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல் தோல்வியா? வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சந்தேகத்துக்கிடமான கம்ப்யூட்டரால் திருப்பி விடப்பட்ட அமெரிக்க விமானம்
Next post சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்குள்…