இதை தலையில் தேயுங்கள்: முடி வேகமாக வளரும்..!!

Read Time:3 Minute, 13 Second

தலையில் உள்ள பொடுகு மற்றும் தூசி, புகை போன்ற அழுக்குகள் தலையில் அதிகமாக படிவதால், முடி உதிர்தல் பிரச்சனை உண்டாகிறது.

அதோடு முகத்தில் பருக்கள் போன்ற பாதிப்பினையும் ஏற்படுத்தும். இதனை தடுக்க இயற்கையான கூந்தல் தைலத்தை தினசரி தலைக்கு பயன்படுத்தி வந்தால் நல்ல பலனைக் காணலாம்.

கூந்தல் தைலம் 1

தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில், விட்டமின் எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய், கரிசலாங்கண்ணி தைலம், பொன்னாங்கன்னித் தைலம், மருதாணித் தைலம், வேம்பாலம் பட்டை, சூரியகாந்தி எண்ணெய் ஆகிய அனைத்து எண்ணெய்களிலும் 50 கிராம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த எண்ணெய்களின் கலவையை நன்கு கலந்து, மிதமாகக் காய்ச்சி அவ்வப்போது தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி ஆரோக்கியமாக வளரும்.

கூந்தல் தைலம் 2

நெல்லிக்காயை பாலில் வேகவைத்து, அதன் கொட்டை நீக்கி விட்டு மசித்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால், கூந்தல் மிருதுவாகும்.

டீ டிகாஷனில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாற்றை கலந்து தலையில் தேய்த்து குளித்தால், கூந்தல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

கூந்தல் தைலம் 3

கறிவேப்பிலை 2 கை அளவு, செம்பருத்தி இலை 1 கை அளவு, மருதாணி இலை 1 கை அளவு, செம்பருத்தி பூ 5, நெல்லிக்காய் 2, வெந்தயம் – 1 தேக்கரண்டி., தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர் ஆகிய அனைத்தையும் அரைத்து ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.

கூந்தல் தைலம் 4

3 கற்றாழையை எடுத்து அதில் உள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது சிறிது படிகாரப் பொடியை தூவி, கற்றாழையின் சதையில் உள்ள நீரை பிரித்து எடுத்து அதற்கு சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி, அதை தினசரி தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

குறிப்பு

தலைக்கு மேலே கூறப்பட்டுள்ள எண்ணெய்களை பயன்படுத்தினால் மட்டும் போதாது. முடி வளர்ச்சியை அதிகரிக்கும் கீரைகள், பேரீச்சம்பழம், அத்திப்பழம், காய்ந்த திராட்சைப் பழம் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரசவத்திற்குப் பின் உடலுறவு – தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
Next post கத்ரீனாவை முத்தமிட மறுத்த சல்மான்கான்..!!