கவனிக்க வேண்டிய குளிர்கால உடல் பிரச்சனைகள்..!!

Read Time:2 Minute, 19 Second

குளிர்காலத்தில் சளி, இருமல், மூக்கடைப்பு, காய்ச்சல் போன்ற அடுக் கடுக்கான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். தொண்டையில் கரகரப்பு, வலி ஏற்படுவது தொடக்க அறிகுறியாக இருக்கும். அதனால் எப்போதும் வெதுவெதுப்பான நீரை பருக வேண்டும். குளிர் காலத்தில் குளிக்காமல் இருப்பதும் சரியல்ல. குளிக்காமலே இருந்தால் சரும நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சூடான நீர் சரும வறட்சியை அதிகப்படுத்தும் என்பதால் குளிரில்லாத நீரில் குளிப்பது நல்லது.

குளிர்காலத்தில் தண்ணீர் பருகும் அளவை குறைத்துக்கொள்ளக்கூடாது. அது நீர்ச்சத்து குறைபாட்டுக்கு வழிவகுத்து, நோய் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மூலிகை டீ, சுக்குக்காபி, புதினா டீ, இஞ்சி டீ போன்றவற்றை பருகலாம். பருகும் பாலில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளலாம். காலை மற்றும் மாலை வேளையில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் ஆஸ்துமா பிரச்சினையால் அவதிப் படுபவர்கள், வயதானவர்கள் காலையில் நடைப்பயிற்சி செய்வதை தவிர்த்து, மாலையில் மேற்கொள்ளலாம்.

உதட்டில் ஏற்படும் வெடிப்பை தவிர்க்க நெய் அல்லது எண்ணெய்யை உதட்டில் பூசலாம். ஒருசிலருக்கு தோலில் வறட்சி ஏற்பட்டு, தோல் வெடித்து காணப்படும். அதை தடுக்க கற்றாழை மற்றும் எண்ணெய்யை தடவி வரலாம். பாதத்தில் ஏற்படும் வலி மற்றும் பாதிப்புகளை தடுக்க, வாளியில் மிதமான சுடுநீரை நிரப்பி அதில் சிறிது உப்பு கலந்து பத்து நிமிடங்கள் கால் பாதங்களை வைத்திருக்கவேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண் துணை இல்லாமல் பெண்களால் வாழ முடியும்: ஆண்ட்ரியா..!!
Next post மின்சாரத்தை பாய்ச்சி மனைவியை கொன்ற கணவன்: அதிரவைக்கும் காரணம்..!!